May 27, 2024
ஆரோக்கியத்திற்கும் சரி, சுவைக்கும் சரி, செய்வதற்கும் சரி மிக எளிமையான உணவு ரசம். இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை யார் வேண்டுமானாலும் சாப்பிடலாம். அனைத்து காலத்திற்கும் ஏற்ற எளிய உணவு இது.
Image Source: iStock
வெறும் வத்தல் வகைகள், மசாலா ஆகியவற்றை மட்டும் பயன்படுத்தி சட்டென இந்த குழம்பை வைத்து விடலாம். இதில் சேர்க்கப்படம் வத்தல், வெங்காயம், பூண்டு ஆகியவை வயிற்று புண்களை ஆற்றக் கூடியவை.
Image Source: iStock
மோர் குழம்பு வைப்பது மிக எளிது. அதிகம் புளிக்காத தயிர், வெங்காயத்தை வைத்தே இந்த குழம்பை செய்து விடலாம். சாதம், சப்பாத்தி, தோசை, இட்லி என அனைத்து உணவுகளுடனும் இதை சாப்பிடலாம்.
Image Source: Samayam Malayalam
பாசிப் பருப்பு அல்லது துவரம் பருப்பை மட்டும் வேக வைத்து, தாளித்து தயாரிக்கும் உணவு. மிகவும் ஆரோக்கியமான இந்த உணவு மிக எளிதாக செய்யக் கூடியதாகும்.
Image Source: iStock
கீரை வகைகளுடன், பாசிப்பருப்பை வேக வைத்து எளிதில் கூட்டு செய்து விடலாம். இதை சாதத்தில் சேர்த்தோ அல்லது கூட்டாகவோ வைத்து சாப்பிடலாம்.
Image Source: iStock
கடலை பருப்பை அரைத்து, உருண்டைகளாக பிடித்து, குழம்பில் போட்டு கொதிக்க வைத்தால் சுவையான பருப்பு உருண்டை குழம்பு ரெடி. இதற்கு சைட் டிஷ் கூட தேவையில்லை.
Image Source: iStock
அசைவ பிரியர்களுக்காக காய்கறி இல்லாமல் புளிக்குழம்பு செய்து, அதில் ஆம்பிலேட் போட்டு லேசாக கொதிக்க விட்டால் குழம்பு ரெடி. இதில் ஆம்பிலேட்டிற்கு பதிலாக பொரித்த அப்பளத்தை கூட சேர்க்கலாம்.
Image Source: iStock
காய்கறி இல்லாத சமயத்தில் கடலை மாவு, தேங்காய் பயன்படுத்தி ஈஸியாக குருமா வைத்து விடலாம். இது சாதத்திற்கு மட்டுமின்றி சப்பாத்தி, தோசை போன்ற உணவுகளுக்கு பொருத்தமானதாக இருக்கும்.
Image Source: iStock
மொச்சை, கொண்டைக் கடலை, பட்டாணி போன்ற பயறு வகைகளை வைத்து, காய்கறிகள் சேர்க்காமலேயே வித விதமான சுவையில் குழம்பு வைத்து விடலாம். இவை உடலுக்கு ஆரோக்கியம் தரக் கூடியதும் கூட.
Image Source: iStock
Thanks For Reading!