Jun 26, 2024
By: Nivethaஎலுமிச்சை பழம் பல்வேறு பயன்கள் அளிக்கக்கூடியது, குறிப்பாக கோடை காலத்தில் இதனை கொண்டு ஜூஸ் போடுவது மட்டுமல்லாமல் பல பானங்கள் தயார் செய்யவும் பயன்படுத்தப்படுகிறது. இப்படியிருக்கையில், காய்ந்து போனதும் தூக்கி எறியப்படும் எலுமிச்சைகளை பற்றி இப்பதிவில் காண்போம்.
Image Source: pixabay
காய்ந்த எலுமிச்சை பழங்களில் புளிப்பு சுவை அதிகரித்துவிடும். எனவே இதனை சூப் மற்றும் கறி, மீன் போன்றவற்றை சமைக்கும் பொழுது பயன்படுத்துகிறார்கள்.
Image Source: pixabay
ஆடையில் படிந்த அழுக்கு கறைகளை அகற்ற காய்ந்த எலுமிச்சைகள் பயன்படுகிறது.
Image Source: istock
காய்ந்த எலுமிச்சை பழங்களை வெட்டி தண்ணீரில் போட்டு அந்த தண்ணீரை குடிக்கலாம், அதே போல் இதனை வைத்து தேநீர் தயாரித்தும் குடிக்கலாம்.
Image Source: pexels
உலர்ந்த எலுமிச்சை இயற்கையான ஸ்க்ரப் போல் பயன்படுத்த முடியும். அந்த தோளில் சிறிது உப்பு தடவி சமையலறையில் உள்ள கறை படிந்த பொருட்களை எளிதாக சுத்தம் செய்து விடலாம். வழுவழுப்பான பாத்திரங்களையும் எளிதாக சுத்தம் செய்துவிட முடியும்.
Image Source: istock
உலர்ந்த எலுமிச்சைகளை வீட்டினை சுத்தம் செய்தல், துடைத்தல் உள்ளிட்ட பணிகளில் பயன்படுத்தலாம்.
Image Source: pixabay
எலுமிச்சைகள் வாய் துர்நாற்றம், ஈறு பிரச்சனை, பிற வாய்வழி பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கவும் அதனை எதிர்த்து போராடவும் எலுமிச்சை தோல் பயன்படுத்தப்படுகிறது.
Image Source: istock
தேநீருடன் எலுமிச்சை தோலினையும் உட்கொள்ளும் பொழுது அது உள்ளே சென்று புற்றுநோய்களை ஏற்படுத்தக்கூடிய செல்களை வளர விடாமல் தடுக்கிறது. மேலும் ரத்தத்தில் வெள்ளை அணுக்கள் அதிகரிக்க உதவுகிறது.
Image Source: pixabay
எலுமிச்சை தோலில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்சத்து, புரதம், வைட்டமின் சி, கொழுப்பு சத்து, கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. எனவே இனி தோலினை வீணடிக்காமல் பயன்படும் வகையில் உபயோகித்து கொள்ளுங்கள்.
Image Source: pixabay
Thanks For Reading!