[ad_1] காரசாரமான ‘முள்ளங்கி துவையல்’ செய்வது எப்படி?

May 14, 2024

காரசாரமான ‘முள்ளங்கி துவையல்’ செய்வது எப்படி?

mukesh M

முள்ளங்கி துவையல்!

நீர்க்கட்டை உடைக்கும் முள்ளங்கி பயன்படுத்தி காரசாரமான துவையல் தயார் செய்வது எப்படி என இங்கு நாம் காணலாம்!

Image Source: istock

தேவையான பொருட்கள்!

முள்ளங்கி - 4 | உளுந்து - 2 ஸ்பூன் | வேர்க்கடலை - 3 ஸ்பூன் | கடலை பருப்பு - 1 ஸ்பூன் | பச்சை மிளகாய் - 5 | புளி - நெல்லிக்காய் அளவு

Image Source: istock

தேவையான பொருட்கள்!

காய்ந்த மிளகாய் - 2 | கறிவேப்பிலை - 1 கொத்து | புதினா தழை - 1 கைப்பிடி | பெருங்காய பொடி - 1 சிட்டிகை | உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

Image Source: istock

செய்முறை படி - 1

முதலில் எடுத்துக்கொண்ட முள்ளங்கியை தோல் நீக்கி சுத்தம் செய்து சிறு துண்டாக நறுக்கி தனியே தயாராக எடுத்து வைக்கவும்.

Image Source: istock

செய்முறை படி - 2

தொடர்ந்து எடுத்துக்கொண்ட வேர்க்கடலையை கடாய் ஒன்றில் சேர்த்து வறுத்து எடுக்கவும். பின் இந்த வேர்க்கடலையை ஆறவிட்டு - தோல் நீக்கி சுத்து செய்துக்கொள்ளவும்.

Image Source: istock

செய்முறை படி - 3

தற்போது துவையல் செய்வதன் முதல் படியாக கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து அதில் சிறிதளவு எண்ணெயுடன் வறுத்த வேர்க்கடலை, உளுந்து, கடலை பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி இறக்கவும்.

Image Source: pexels-com

செய்முறை படி - 4

பின் இதே கடாயில் சிறிதளவு எண்ணெயுடன் நறுக்கிய முள்ளங்கி, உப்பு, புதினா தழை, பெருங்காய பொடி சேர்த்து 2 - 3 நிமிடங்கள் கிளறி பின், பாத்திரத்தை மூடி 4 நிமிடங்களுக்கு வேக வைத்து இறக்கவும்.

Image Source: istock

துவையல் ரெடி!

இச்சேர்மங்கள் அனைத்தும் நன்கு ஆறியதும், மிக்ஸி ஜார் ஒன்றில் சேர்த்து நன்கு விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ள துவையல் ரெடி!

Image Source: istock

எப்படி பரிமாறுவது?

தயாராக உள்ள இந்த முள்ளங்கி துவையலை சுட சுட வடித்து எடுத்த வெள்ளை சாதத்துடன் சேர்த்து ஒரு தட்டில் வைத்து ருசியாக பரிமாறவும்!

Image Source: istock

Thanks For Reading!

Next: சுத்தமாக சர்க்கரை இல்லாத 'ஆப்பிள் - சாக்லேட்' ஐஸ்கிரீம்

[ad_2]