[ad_1] கார்ட்டிசால் என்றால் என்ன? அதன் ஆபத்துகள் என்னென்ன?

Jul 30, 2024

கார்ட்டிசால் என்றால் என்ன? அதன் ஆபத்துகள் என்னென்ன?

mukesh M

Cortisol என்றால் என்ன?

கார்டிசால் (Cortisol) எனப்படுவது மனிதர்களை மன உளைச்சலுக்கு உள்ளாகும் ஒரு ஹார்மோன் சுரப்பி ஆகும். இந்த ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் உண்டாகும் பிரச்சனைகள் என்ன? அறிகுறிகள் என்ன? தடுப்பதன் வழிகள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

ஆபத்துக்கள் என்ன?

கார்டிசால் அளவு அதிகரிக்கும் போது மன உளைச்சல் மட்டும் அதிகரிப்பது இல்லை, இரத்த அழுத்த அளவம் அதிகரிக்கும். மேலும், எலும்புகள் பலவீனமடைவதோடு, ஆஸ்துமா, கீல்வாதம், வகை-2 நீரிழிவின் வாய்ப்புகளையும் அதிகரிக்கும்!

Image Source: istock

கண்டறிவது எப்படி!

கார்டிசால் எனும் இந்த மன உளைச்சல் உண்டாக்கும் ஹார்மோன் அளவு உடலில் அதிகரிக்கும் போது கழுத்து பகுதியில் கூம்பு வடிவ தோற்றம் உண்டாக கூடும். இந்த அறிகுறியை கண்டால் உங்கள் உடலில் கார்டிசால் அளவு அதிகமாக உள்ளதை நீங்கள் உணரலாம்!

Image Source: istock

சருமத்தில் தழும்புகள்!

கார்டிசால் அளவு அதிகரிக்கும் போது சருமத்தில் ஆங்காங்கே பிங்க் (அ) இளஞ்சிவப்பு நிற தழும்புகளை நீங்கள் காணலாம். வெட்டு காயங்கள் போன்று இந்த தழும்புகள் காட்சியளிக்கும்!

Image Source: istock

ஆங்காங்கே சதைகளின் அடர்த்தி அதிகரிக்கும்!

உடலில் கழுத்து பகுதியை தவிர்த்து முகம், தொடைகளுக்கு இடைப்பட்ட பகுதி, அக்குள் ஒட்டியுள்ள பகுதியில் சதைப்பற்று அதிகரிக்கும். உடல் சதைகளின் அடர்த்தி அதிகரிக்கும் இந்த நிலை கார்சால் அளவு உயர்வதன் அடையாளங்கள் ஆகும்!

Image Source: istock

தளர்வடையும் தசைகள்!

உடலின் பல்வேறு பகுதியில் தசைகளின் அடர்த்தி அதிகரிக்கும் நிலையிலும், தசைகளின் வலிமை (இறுக்கத் தன்மை) குறைந்து தொய்வுற்று காணப்படும்!

Image Source: istock

பருக்கள் அதிகரிக்கும்!

ஆய்வாளர்கள் கூற்றுப்படி இந்த கார்டிசால் அளவு அதிகரிக்கும் போது பருக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும். முகத்தில் மட்டும் அல்லாது முதுகு பகுதி, தொடை பகுதியிலும் பருக்கள் உண்டாகும்!

Image Source: istock

மாதவிடாய் சிக்கல்கள்!

பெண்கள் உடலில் இந்த கார்டிசால் அளவு அதிகரிக்கும் போது, முகத்தில் தேவையற்ற முடிகள் அதிகரிப்பதோடு மாதவிடாய் தள்ளிப்போதல் - நின்றுபோதல் போன்ற பிரச்சனைகளும் எழக்கூடும்!

Image Source: istock

கார்டிசால் அளவை கட்டுக்குள் வைப்பது எப்படி?

போதுமான ஓய்வு (உறக்கம்), டீ - காபி போனவற்றை தவிர்த்தல், அளவான உடற்பயிற்சி, இரத்த அழுத்த மேலாண்மை மற்றும் மன அழுத்தத்திற்கான காரணங்களில் இருந்து விலகி இருப்பதன் மூலம் இந்த பிரச்சனையை நாம் தவிர்க்கலாம்!

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: கர்நாடகா சிவப்பு நிற பலா பழ சாகுபடி குறித்த தகவல்கள்

[ad_2]