[ad_1] காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலை பாதுகாக்கும் மூலிகைகள்

Aug 5, 2024

காற்று மாசுபாட்டால் பாதிக்கப்படும் நுரையீரலை பாதுகாக்கும் மூலிகைகள்

Nivetha

நுரையீரல்

தற்போதைய காலக்கட்டத்தில் இருக்கும் காற்று மாசுபாடு மற்றும் தவறான உணவு முறைகள் காரணமாக நுரையீரல் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில், நுரையீரலை பாதுகாத்து பராமரிக்க சரியான உணவுமுறைகள், உடற்பயிற்சி போன்றவைகளை பின்பற்றுவதோடு ஒருசில மூலிகைகளை பயன்படுத்துவதன் மூலம் அதன் ஆரோக்கியம் மேம்படும்.

Image Source: istock

ஆடாதோடை

ஆடாதோடை இலை பல்வேறு நோய்களுக்கு மருந்தாகிறது, இதனை உட்கொள்வதன் மூலம் சளி, இருமல் நீங்கி நுரையீரல் செயல்பாடு மேம்படும் என்று கூறப்படுகிறது. அழற்சி, ஆஸ்துமா, சுவாச கோளாறுகள் ஆகியவற்றை குணப்படுத்தும் தன்மை இதற்கு உண்டு. இந்த இலைகளை மிளகுத்தூள் சேர்த்து கஷாயம் செய்து குடிப்பதன் மூலம் நல்ல பலன் கிட்டும்.

Image Source: istock

அதிமதுரம்

சுவாச கோளாறுகளை குணப்படுத்தும் மூலிகைகளுள் முக்கியமானது இந்த அதிமதுரம். அதிமதுரத்தை கஷாயமாகவோ, டீ போல் தயாரித்தோ அல்லது அதிமதுர பொடியோடு தேன் சேர்த்து குழைத்து சாப்பிட்டாலும் சிறந்த பலன்களை பெறலாம்.

Image Source: istock

இஞ்சி

இஞ்சியில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. சுவாசப்பாதையில் ஏற்ப்படக்கூடிய வீக்கத்தை சரி செய்து, நுரையீரலில் சுவாச தொற்றுகள் ஏற்படுவதிலிருந்தும் நம்மை பாதுக்காக்கும் பண்புகள் இஞ்சியில் உள்ளது. ​

Image Source: istock

கண்டந்திப்பிலி மற்றும் அரிசி திப்பிலி

நாள்பட்ட நுரையீரல் பாதிப்புகள், சுவாச கோளாறு பிரச்சனைகளுக்கு திப்பிலியை ரசம் வைத்து உணவுடன் சேர்த்து சாப்பிடுவார்கள். மேலும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய கண்டந்திப்பிலி மற்றும் அரிசி திப்பிலி பொடிகளை வாங்கி சுத்தமான தேனில் குழைத்து சாப்பிட்டு வருவதன் மூலமும் நல்ல பலன்களை பெற முடியும்.

Image Source: istock

துளசி இலைகள்

சக்தி வாய்ந்த ஆன்ட்டி அக்டோ மற்றும் வளர்ச்சி எதிர்ப்பு பண்புகள் துளசியில் உள்ளது. துளசி இலைகள் மூக்கடைப்பை அகற்றி, சுவாசப்பாதையில் இருக்கும் சளியை நீக்குவதோடு நுரையீரலில் இருக்கும் நச்சுக்களையும் வெளியேற்ற கூடிய சக்தி கொண்டது.

Image Source: istock

லவங்கப்பட்டை

ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி அதில் 2 லவங்கப்பட்டைகளை போட்டு நன்கு கொதிக்கவிட்டு பாதியளவு நீர் வற்றியதும் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு அந்நீரை குடிக்கவும். இது நுரையீரலில் தேங்கும் அழுக்குகளை வெளியேற்றுவதில் பெரும் பங்கு வகிக்கிறது.

Image Source: istock

மிளகு

மிளகை நன்றாக தட்டி பொடியாக பாலில் கலந்து கொதிக்க விட்டு பனங்கற்கண்டு சேர்த்து குடிக்கவும். அல்லது ஒரு கரண்டி சூடான சாதத்தில் மிளகுத்தூள், உப்பு, நெய் சேர்த்து சாப்பிடலாம், மிளகு கஷாயம் வைத்தும் குடிக்கலாம். இப்படி மிளகை நாம் உட்கொள்வதன் மூலம் நுரையீரலில் இருக்கும் அழுக்குகள் மற்றும் நச்சுக்கள் வெளியேறும்.

Image Source: istock

திரிபலா சூரணம்

நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைக்க இந்த மூலிகை மிகவும் உதவுகிறது. நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கக்கூடிய இந்த சூரணத்தை வாங்கி சுடுதண்ணீரில் போட்டு தினமும் குடித்து வந்தால் நுரையீரல் சம்மந்தமான பிரச்சனைகள் எதுவும் ஏற்படாமல் தடுக்கலாம் என்று கூறப்படுகிறது.

Image Source: pexels

Thanks For Reading!

Next: குடல் ஒட்டுண்ணிகளை அகற்றும் உணவு வகைகள்

[ad_2]