Jul 13, 2024
காலரா எனப்படுவது விபிரியோ காலரே (Vibrio cholerae) எனப்படும் பாக்டீரியா தொற்றால் உண்டாகும் குடலழற்சி நோய் ஆகும். வாந்தி - பேதி பிரச்சனைக்கு வழிவகுக்கும் இந்த கிருமி தொற்று உள்ளவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய உணவு வழக்கம் பற்றி இங்கு காணலாம்!
Image Source: istock
காலரா காரணமாக உண்டாகும் வயிற்றுப்போக்கு உடலில் நீரிழப்பை உண்டாக்க கூடும். இதனை சமாளிக்க போதுமான அளவு நீர், பழச்சாறு, சூப் உள்ளிட்ட நீர் ஆகாரங்களை எடுத்துக்கொள்ளுங்கள்.
Image Source: istock
இயற்கை நமக்கு அளித்த பழங்கள் மற்றும் காய்கறிகளை பயன்படுத்தி தயார் செய்யப்படும் சாறுகள் - ஸ்மூத்திகளை போதுமான அளவு எடுத்துக்கொள்ளலாம்.
Image Source: pexels-com
எடுத்துக்கொள்ளும் உணவு வகைகள் எளிதில் செரிமானம் ஆக கூடிய எளிய உணவுகளாக இருப்பது அவசியம். செரிமானத்தை சிரமமாக்கும் கடின உணவுகளான எண்ணெய் பொருட்கள், காரமான (மசாலா) உணவுகளை தவிர்க்கவும்.
Image Source: istock
காலரா உள்ளவர்களுக்கு திரவ உணவுகளின் அவசியம் அதிகம் இருக்கும் நிலையில், எலக்ட்ரோலைட் நிறைந்த இளநீர் (அ) பார்லி நீரை அதிகம் எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக, தினமும் காலை இந்த பானங்களுடன் உங்கள் நாளை துவங்குவது நல்லது!
Image Source: istock
காலரா உள்ளவர்கள் அடிக்கடி எதிர்கொள்ளும் பிரச்சனைகளில் ஒன்று குமட்டல் - வாந்தி. இந்த பிரச்சனை உள்ளபோது புளித்த மோர் பருகுவது நல்லது. இதன் மருத்துவப் பண்புகள், குடல் எரிச்சலை குறைக்க உதவும்.
Image Source: istock
நீர் ஆகாரத்துடன் திட உணவுகளுக்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம். அந்த வகையில் அரிசி கஞ்சி, தயிர், வெஜிடேபில் போர்த் போன்ற அரை திட உணவுகளை போதுமான அளவு எடுத்துக்கொள்ளுங்கள்.
Image Source: istock
தயிர் போன்ற புளித்த உணவுடன் வைட்டமின் சி நிறைந்த வினிகர், எலுமிச்சை, புதினா போன்றவற்றையும் உங்கள் டயட் வழக்கத்தில் சேர்த்துக்கொள்வது நல்லது!
Image Source: istock
பச்சை காய்கறிகள், தானியங்கள், முளைக்கட்டிய பயறுகளை உட்கொள்வது கூடாது. மேலும், பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களையும் உட்கொள்வது நல்லது அல்ல, என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்!
Image Source: istock
Thanks For Reading!