[ad_1] காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற பழங்களும், காய்கறிகளும்

Jun 4, 2024

காலையில் சாப்பிடுவதற்கு ஏற்ற பழங்களும், காய்கறிகளும்

Mohana Priya

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் வைட்டமின் சி அதிகம் நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்குள். இது உடலை எப்போது நீர்சத்து குறையாமல் பாதுகாக்கும்.

Image Source: iStock

தர்ப்பூசணி

தர்ப்பூசணியில் அதிகமான நீர்ச்சத்து உள்ளது. அதோடு வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளதால் தோலின் ஆரோக்கியத்திற்கும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கவும் உதவும்.

Image Source: Samayam Tamil

தக்காளி

தக்காளியில் வைட்டமின் சி, கே மற்றும் லைகோபின் ஆகியவை அதிகம் உள்ளன. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நோய்கள் ஏற்படுவதை தடுத்து, இதயத்தை பாதுகாக்கிறது.

Image Source: iStock

​பச்சை காய்கறிகள்

பச்சை காய்கறிகளில் இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ,சி போன்ற சத்துக்கள் உள்ளதால் எலும்புகளை பாதுகாப்பதுடன், நோய் எதிர்ப்பு ஆற்றலை தந்து, உடலுக்கு ஆற்றலை தருகிறது.

Image Source: iStock

அவகோடா

அவகோடாவில் மோனோஅன்சேசுரேடட் கொழுப்புகள், நார்ச்சத்து, பொட்டாசியம் ஆகியவை உள்ளதால் இதயத்தை பாதுகாத்து, நீண்ட நாள் வாழ செய்கிறது.

Image Source: iStock

பெர்ரி

பெர்ரி வகைகளில் அதிக அளவில் ஆன்டிஆக்சிடென்ட்கள், வைட்டமின்கள், நார்ச்சத்து ஆகியவை உள்ளதால் செரிமானத்தை அதிகரிக்க செய்து ஆரோக்கியத்தை பாதுக்கிறது. ஸ்டிராபெர்ரி, ப்ளூபெர்ரி, ரோஸ்பெர்ரி ஆகியவை காலை உணவிற்கு ஏற்றவை.

Image Source: iStock

​பீச் பழங்கள்

பீச் பழங்களில் வைட்டமின் ஏ, சி, நார்ச்சத்து, ஆன்டிஆன்சிடென்ட் ஆகியவை அதிகம் உள்ளன. இது தோலின் ஆரோக்கியத்தையும், செரிமானத்தையும் பாதுகாக்கிறது. இதை தனியாகவோ அல்லது யோகர்டுடன் சேர்த்தோ சாப்பிடுவது சிறந்தது.

Image Source: iStock

​அன்னாசிப்பழம் :

அன்னாசிப்பழத்தில் பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம் நிறைந்திருப்பதால் காலை உணவுக்கு ஏற்ற உணவாக இது கருதப்படுகிறது.

Image Source: iStock

கேரட்

கேரட், உருளைக்கிழங்கு போன்ற மண்ணுக்கு அடியில் விளையும் காய்களில் புரதச்சத்துக்களும், நார்சத்துக்களும் அதிகம் உள்ளதால் நாள் முழுவதும் இது சுறுசுறுப்புடன் இயங்க வைக்கும்.

Image Source: iStock

Thanks For Reading!

Next: கரோனரி இதய நோய் உள்ளவர்கள் முட்டை சாப்பிடலாமா ?

[ad_2]