Jul 2, 2024
காலையில் எழுந்ததும் உடலையும், மனதையும் புத்துணர்ச்சியாக வைத்திருப்பது மிகவும் அவசியமாகும். அதற்கு இரவில் சாப்பிட வேண்டிய ஸ்நாக்ஸ் வகைகளை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்
Image Source: istock
வாழைப்பழத்தில் ஆன்டி ஆக்ஸிடன்கள், தாதுக்கள் மற்றும் விட்டமின்கள் காணப்படுகிறது. நல்ல செரிமானம் மற்றும் நாள் முழுவதற்கும் தேவையான எனர்ஜியை தருகிறது. இரவில் படுப்பதற்கு முன்பு வாழைப்பழங்களை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: pexels-com
அவகோடா பழங்களில் விட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இதில் மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் சத்துக்கள் உள்ளன. இதயம் தொடர்பான நோய்களை களைகிறது. சரும அழகை மேம்படுத்தும்.
Image Source: istock
டார்க் சாக்லேட்டுகளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடன்கள், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பண்புகள் உள்ளன. உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. நல்ல தூக்கத்தை தருகிறது.
Image Source: istock
நட்ஸ் வகைகளில் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், விட்டமின் ஈ நிரம்பியுள்ளன. இது சருமம் வயதாகுவதை தடுக்கிறது. மன நிலையை மேம்படுத்தவும், மகிழ்ச்சியான ஹார்மோன்களை அதிகரிக்கிறது.
Image Source: istock
பாப்கார்னில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. இதய நோய் அபாயத்தை குறைக்கிறது. தூக்கத்தை மேம்படுத்துகிறது.
Image Source: istock
2011 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட 24 ஆய்வில் படுக்கைக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு இரண்டு கிவி பழங்களை 4 வாரங்களுக்கு சாப்பிடுவது நீண்ட நேரம் தூங்குவதற்கு உதவும் என தெரிய வந்துள்ளது.
Image Source: istock
தயிரில் பழங்கள் அல்லது நட்ஸை சேர்த்து சாப்பிட செய்யலாம். இதிலுள்ள புரோட்டீன் மற்றும் கால்சியம் சத்துகள், நல்ல தூக்கத்திற்கு வழிவகுத்து காலையில் புத்துணர்ச்சியாக இருக்க உதவக்கூடும்
Image Source: istock
படுக்கைக்கு முன்பு இந்த உணவுகளை ஒரு போதும் எடுத்துக் கொள்ளாதீர்கள். இது உங்கள் தூக்க சுழற்சியை பாதிக்கலாம். இனிப்பு வகைகள், எனர்ஜி ட்ரிங்க்ஸ், கனமான உணவுகள் இவற்றை தவிருங்கள்.
Image Source: istock
Thanks For Reading!