May 3, 2024
பழைய சாதம் உடலுக்கு ஆரோக்கிய நன்மைகளை அளிப்பது போல், பழைய சப்பாத்தியும் உடலுக்கு மிகவும் நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த பதிவில், நேற்று சுட்ட சப்பாத்தியை மறுநாள் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்களை பற்றி காணலாம்
Image Source: istock
காலை உணவாக பழைய சப்பாத்தியை குளிர்ந்த பாலுடன் சேர்த்து சாப்பிடுவது, ரத்த அழுத்தம் அளவை சமநிலையில் பராமரிக்க உதவக்கூடும். பாலில் கூட அத்தியாவசிய சத்துக்கள் இருப்பதால், இரட்டிப்பு பலன்கள் தரக்கூடும்
Image Source: istock
சப்பாத்தி சுட்டு நேரம் ஆகும் போது, அதன் கார்போஹைட்ரேட் உடைந்து விடுவதால் ஜீரணம் எளிதில் நடக்கும். இது சென்சிடிவ் செரிமான அமைப்பை கொண்டிருப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.
Image Source: istock
பிரஷ் சப்பாத்தியை விட பழைய சப்பாத்தியின் கிளைசெமிக் குறியீடு குறைவாகும். பழைய சப்பாத்தியில் கார்போஹைட்ரேட் அமைப்பில் ஏற்படும் மாற்றத்தால், ரத்தத்தில் குளுக்கோஸ் வெளியீடு குறைய செய்கிறது. இதனை பாலுடன் சேர்த்து சாப்பிட நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்
Image Source: pexels-com
குளிர்ந்த பாலில் ஊறவைத்த பழைய சப்பாத்திகளை சாப்பிடுவது, உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்த உதவுகிறது. பாலில் உள்ள கூடுதல் ஊட்டச்சத்து உடல் அசௌகரியத்தை போக்க உதவும்
Image Source: istock
பிரஷ் சப்பாத்தியில் கலோரி உள்ளடக்கம் அதிகமாக இருக்கக்கூடும். ஆனால், சுட்டு நேரமான சப்பாத்தியில் ஸ்டார்ச் உடைந்து கலோரி உள்ளடக்கம் குறையக்கூடும். உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு பழைய சப்பாத்தி சிறந்த தேர்வாகும்
Image Source: istock
பழைய சப்பாத்தியை காலை உணவாக சாப்பிட்டு வந்தால், வாயு, மலச்சிக்கல், அசிடிட்டி மற்றும் பிற வயிற்று அசெளகரியங்கள் நீங்கக்கூடும் என நிபுணர்கள் கூறுகின்றனர்
Image Source: istock
சப்பாத்தி சுட்ட போது காணப்படும் ஊட்டச்சத்து மதிப்பு பழைய சப்பாத்தியிலும் அதே அளவில் தான் இருக்கும். பழைய சப்பாத்தியில் வைட்டமின் பி, இரும்பு மற்றும் நார்ச்சத்து காணப்படுகிறது
Image Source: istock
சப்பாத்தி சுட்டு 12 முதல் 15 மணி நேரத்திற்கு நன்றாக இருக்கும் என கூறப்படுகிறது. எனவே, இரவு சுட்ட சப்பாத்தியை காலையில் பாலில் ஊறவைத்து சாப்பிட செய்யலாம். சிலர், சப்பாத்தியை பிரிட்ஜில் முறையாக சேமித்தும் சாப்பிட செய்வார்கள்
Image Source: istock
Thanks For Reading!