Aug 8, 2024
முளைகட்டிய பயறு எனப்படுவது முளைக்க வைக்கப்பட்ட நிலையில் உள்ள பயறு வகைகள் ஆகும். எண்ணற்ற வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்த இந்த பயறை காலை உணவாக உட்கொள்வதன் நன்மை - தீமைகள் பற்றி இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
நார்ச்சத்து அதிகம் நிறைந்து காணப்படும இந்த முளைகட்டிய பயறு, செரிமானத்தை மேம்படுத்தும் தன்மை கொண்டது. அந்த வகையில் இது காலை நேர மலச்சிக்கலை போக்குவதோடு, குடல் புற்றுநோய் உண்டாவதன் வாய்ப்பையும் குறைக்கிறது!
Image Source: istock
தகவல்கள் படி இந்த முளைகட்டிய பயறில் போதுமான அளவு பொட்டாசியம் காணப்படுகிறது. இந்த பொட்டாசியம் இரத்த நாளங்களை தளர்த்தி - உடலில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது. அந்த வகையில் இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக வைத்துக்கொள்கிறது!
Image Source: istock
முளைகட்டிய பயறு வகைகளை பச்சையாக எடுத்துக்கொள்ளும் நபர்கள் ஒரு சிலர் சரும சிவத்தல் பிரச்சனையை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக கண்கள், காது, மூக்கு, கழுத்து பகுதியில் இந்த பிரச்சனை உண்டாகிறது!
Image Source: istock
முளைகட்டிய பயறில் காணப்படும் போதுமான அளவு வைட்டமின் சி ஆனது, வலுவான நோய் எதிர்ப்பு மண்டலத்தை கட்டமைப்பதில் உதவுகிறது. அந்த வகையில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவால் உண்டாகும் ஆரோக்கிய பிரச்சனைகளை இது தடுக்கிறது!
Image Source: istock
புரதம் அளவு அதிகமாகவும் அதேநேரம் கலோரி அளவு குறைவாகவும் கொண்டிருக்கும் இந்த முளைகட்டிய பயறு வகைகள், ஆரோக்கிய உடல் எடை பராமரிப்பில் உதவுகிறது.
Image Source: pexels-com
முளைகட்டிய பயறு வகைகளின் நுகர்வு செரிமானத்தை சீராக்கும் அதேநேரம், இந்த பயறு வகைகளை பச்சையாக எடுத்துக்கொள்வது வயிற்று வலி, உப்புசம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் வழிவகுக்க கூடும்!
Image Source: istock
நார்ச்சத்து நிறைந்த இந்த முளைகட்டிய பயறை காலை உணவாக எடுத்துக்கொள்வது வயிற்றின் முழுமையை உறுதி செய்கிறது. அந்த வகையில் உங்கள் பசியை கட்டுப்படுத்தி, தினசரி வேலைகளை சிரமம் இன்றி செய்ய உதவுகிறது!
Image Source: istock
முளைகட்டிய பயறு வகைகளை பச்சையாக எடுத்துக்கொள்ளும் நபர்கள் சிலர் வயிற்று உபாதை பிரச்சனைகளுடன் வாந்தி, குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் எதிர்கொள்வது உண்டு. குறிப்பாக, வெறும் வயிற்றில் எடுத்துக்கொள்ளும் போது!
Image Source: istock
Thanks For Reading!