[ad_1] காலை பொழுதை சந்தோஷமாக மாற்ற கூடிய சத்தான உணவு வகைகள்

Jul 8, 2024

காலை பொழுதை சந்தோஷமாக மாற்ற கூடிய சத்தான உணவு வகைகள்

Nivetha

காலை உணவு

காலை உணவு என்பது நாம் தவிர்க்கக்கூடாத ஒன்றாகும். இந்த உணவு தான் நம்மை நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு செயல்பட வைப்பதோடு மனதில் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தக்கூடியது. அந்த வகையில் ஒருசில சத்தான காலை உணவு வகைகளை தெரிந்து கொள்வோம்.

Image Source: pexels

ஓட்ஸ்

ஓட்ஸில் காம்ப்ளெக்ஸ் கார்போஹைட்ரேட்ஸ் உள்ளது, இது செரட்டோனின் அளவை அதிகரிக்க செய்து மகிழ்ச்சியான மனநிலை தொடர உதவுகிறது. இந்த ஓட்ஸில் பட்டாணி, கேரட், கொத்தமல்லி தழைகள், சீரகம், மஞ்சள், பெல் பெப்பர் உள்ளிட்ட பொருட்களை சேர்த்து சாப்பிட்டால் வைட்டமின்கள் மற்றும் நார்சத்து கிடைக்கும்.

Image Source: pixabay

பாதாம், பனானா கொண்ட ஸ்மூத்தி

பாதாம் பருப்புகள், வாழைப்பழம் மற்றும் சிறிதளவு தேன் சேர்த்து ஸ்மூத்தியாக குடித்தால் மகிழ்வூட்டும் செரட்டோனின் ஹார்மோன்களாக மாறக்கூடிய ட்ரைய்ப்ட்டோஃபேன் என்னும் அமினோ அமிலம் அதிகளவு கிடைக்கும். மேலும் வைட்டமின் பி6 உள்ளிட்ட ஊட்டச்சத்துக்களும் இதில் கிடைக்கும்.

Image Source: pixabay

பெர்ரி சியா புட்டிங்

சியா விதைகளை இரவில் தேங்காய் பாலில் ஊறவைத்து காலையில் அதில் ப்ரெஷ்ஷான பெர்ரி பழங்களை சேர்த்து சாப்பிடுங்கள். அதில் ஆன்ட்டி ஆக்சிடெண்ட்டுக்கள் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்துள்ளதால் மன அழுத்தம் மற்றும் மனக்கவலைகளை போக்கி சந்தோஷத்தை கொடுக்கிறது.

Image Source: pixabay

முளைகட்டிய பச்சை பயிறு

முளைகட்டிய பச்சை பயறுகளில் அதிகளவில் வைட்டமின்கள் மற்றும் ப்ரோட்டீன்கள் நிறைந்துள்ளது. இது நியூரோ ட்ரான்ஸ்மிட்டரின் செயல்பாட்டினை மேம்படுத்தி மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும் என்று கூறுகிறார்கள்.

Image Source: istock

ஊட்டச்சத்துக்கள்

முளைகட்டிய பச்சை பயறுடன் கேரட், கொத்தமல்லி தழை, தக்காளி, வெள்ளரிக்காய், சிறிதளவு கருப்பு சால்ட் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

Image Source: istock

தயிர்

தயிரில் நிறைந்துள்ள ப்ரோ பயோட்டிக்குகள் ஜீரண மண்டல உறுப்புகளின் ஆரோக்கியத்தினை மேம்படுத்துகிறதாம்.

Image Source: istock

மூளை செயல்திறன்

தயிரை காலை உணவாக சாப்பிடும் பட்சத்தில் மூளையின் செயல்திறன் முறைப்படுத்தப்பட்டு மனத்தெளிவு பிறக்குமாம். மேலும் தயிருடன் தேன், நட்ஸ் மற்றும் சீட்ஸ் சேர்த்து சாப்பிட்டால் உடலுக்கு எனர்ஜி கிடைப்பதுடன் சமநிலையான மனநிலை உருவாகும்.

Image Source: pexels

உலர்ந்த அத்திப்பழம்

உலர்ந்த அத்திப்பழத்தை இரவில் தண்ணீரில் ஊறவைத்து காலையில் எழுந்தவுடன் தொடர்ந்து ஒருமாதம் சாப்பிட்டு வந்தால் இரும்புசத்து குறைபாடு முற்றிலும் நீங்குவதோடு, ஹீமோகுளோபின் அளவும் மேம்படும்.

Image Source: pixabay

Thanks For Reading!

Next: சிறுநீர் கழித்த உடனேயே 'தண்ணீர்' குடிப்பது சரியா? தவறா?

[ad_2]