[ad_1] ​கிட்னியை சுத்தப்படுத்தும் பூனை மீசை மூலிகை என்னும் ஜாவா தேயிலையின் பயன்கள்

Jun 28, 2024

​கிட்னியை சுத்தப்படுத்தும் பூனை மீசை மூலிகை என்னும் ஜாவா தேயிலையின் பயன்கள்

Nivetha

​பூனை மீசை மூலிகை

சிறுநீரக கோளாறுகளுக்கு இந்த பூனை மீசை மூலிகை பெயர் பெற்றது. இந்த செடியின் பூக்கள் பார்க்க பூனை மீசை போல காட்சியளிப்பதால் இதனை இவ்வாறு கூறுகிறார்களாம். ஆரம்பக்கட்ட சிறுநீரக புற்றுநோயை குணமாக்கும் வீரியம் இதற்கு உள்ளது.

Image Source: instagram

​ஜாவா தேயிலை

இந்த மூலிகையை ஜாவா தேயிலை என்றும், சீரக துளசி என்றும் கூறுகிறார்கள். இதன் பல்வேறு மருத்துவ நன்மைகளை இப்பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

Image Source: pixabay

சிறுநீரக செயலிழப்பு

இந்த மூலிகை இலைகளை பூண்டு மற்றும் மிளகுடன் சேர்த்து நன்கு அரைத்து எடுத்து கொள்ளுங்கள். தினமும் 2 வேளை சாப்பிட்ட பிறகு ஒரு நெல்லிக்காய் அளவு மூலிகையை சாப்பிட்டு வந்தால் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட சிறுநீரக கோளாறுகள் குணமாகும். கட்டுக்குள் வராத நீரிழிவு நோயும் கட்டுக்குள் வந்திடும்.

Image Source: istock

இதர நாடுகள்

மலேசியா, ஜப்பான், சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் க்ரீன் டீ போல் இதனை அருந்துகிறார்கள். ஐரோப்பாவில் இந்த டீயை ஜாவா டீ என்றும் கிட்னி டீ என்றும் கூறுகிறார்கள். நோய் இல்லாதோரும் இதனை அருந்தலாம்.

Image Source: pexels

​ஜாவா டீ செய்முறை

ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் பூனை மீசை மூலிகையை போட்டு அடுப்பை அணைத்து 20 நிமிடங்கள் மூடி போட்டு வைக்கவும். பின்னர் அதில் சுவைக்காக தேன், பனை வெல்லம் உள்ளிட்டவைகளை சேர்த்து குடிக்கலாம். மற்ற டீக்களை கொதிக்க வைப்பது போல் இதனை கொதிக்க வைக்கக்கூடாது.

Image Source: pixabay

ஜாவா டீ பயன்கள்

இந்த டீயை தினமும் குடித்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்படும். ரத்த அழுத்தம், ரத்த கொதிப்பு உள்ளிட்டவை குணமாவதோடு உடலிலுள்ள தேவையில்லா உப்பு மற்றும் கெட்ட நீரினை வெளியேற்றுகிறது.

Image Source: istock

கிட்னி

ரத்தத்திலுள்ள யூரியா, க்ரயாடின் உள்ளிட்டவைகளை குறைத்து, உப்புநீரை சிறுநீர் வழியே வெளியேற்றி கிட்னியை சுத்தப்படுத்தி, உடல் எடை குறைக்கவும் பயன்படுகிறது.

Image Source: istock

மாதவிடாய்

பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகள், வாதம், வலிப்பு, மேக வெட்டை நோய் போன்றவைகளுக்கு இந்த மூலிகையை பாரம்பரிய வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகிறது.

Image Source: istock

​பிரபலமான மூலிகை

தென் ஆசியாவில் இதனை பித்தப்பையில் ஏற்படும் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. எனவே இது அங்கு பிரபலமான மூலிகையாக கருதப்படுகிறது.

Image Source: pixabay

Thanks For Reading!

Next: பல்வேறு நன்மைகளை அள்ளிக்கொடுக்கும் பாரிஜாதம்

[ad_2]