Aug 13, 2024
Mr.360 டிகிரி என்று ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படும் ஏபிடி வில்லியர்ஸ், உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவராவர். டெஸ்டில் 8,765 ரன்கள், ஒருநாள் போட்டியில் 9,577 ரன்கள் மற்றும் டி20, ஐபிஎல்லில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார்
Image Source: x-com/icc
ஏபிடிக்கு இளமை பருவத்தில் டென்னிஸ் மற்றும் கோல்ஃப் விளையாட்டுகள் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. அப்போது, டென்னிஸ் விளையாட்டில் அவரது வயது பிரிவில் நம்பர் 1 வீரராகவும் திகழ்ந்துள்ளார்
Image Source: instagram-com/abdevilliers17
இந்திய அணியின் சிறந்த சுழற்பந்து வீச்சாளரான யுவேந்திர சாஹல், ஒருநாள் போட்டியில் 121 விக்கெட்டுகளும், டி20ல் 96 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
Image Source: instagram-com
யுவேந்திர சாஹல் மிகவும் திறமையான செஸ் வீரர். உலக இளைஞர் செஸ் சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பாக பங்கேற்றுள்ளார். 1997 முதல் 2003 வரை செஸ் விளையாட்டில் சாஹல் கவனம் செலுத்தி வந்தார்
Image Source: instagram-com/yuzi_chahal23
உலகில் தலைச்சிறந்த கிரிக்கெட் வீரர்களின் பட்டியலில் விவ் ரிச்சர்ட்ஸ் பெயர் தவறாமல் இடம்பெறக்கூடும். 80களில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் கலக்கி சிறந்த ஆல்ரவுண்டராக திகழந்தார்
Image Source: x-com/icc
கால்பந்து மைதானத்திலும் விவ் ரிச்சர்ட்ஸ் தனது திறனை நிரூபித்துள்ளார். 1974 FIFA உலகக் கோப்பைக்காக தகுதிச்சுற்று போட்டிகளில் Antigua மற்றும் Barbuda அணிகளுக்காக விளையாடியுள்ளார்
Image Source: x-com
உலகின் தலைசிறந்த பில்டரான ஜாண்டி ரோட்ஸ், கிரிக்கெட் மட்டுமின்றி ஹாக்கியிலும் தென்னாப்பிரிக்கா அணிக்காக விளையாடியுள்ளார். 1992 ஒலிம்பிக் விளையாட்டுக்கான ஹாக்கி அணியிலும் இடம்பெற்றிருந்தார்
Image Source: x-com/icc
இவர் ஆஸ்திரேலியா மகளிர் அணியின் சிறந்த வீராங்கணையில் ஒருவராவர். ஒருநாள் தொடரில் 4000 ரன்களும், டி20 போட்டிகளில் 1,800க்கும் அதிகமான ரன்கள் எடுத்துள்ளார்
Image Source: x-com/icc
எல்லிஸ் பெர்ரியின் விளையாட்டு பயணம் கால்பந்து மைதானத்தில் தான் ஆரம்பித்தது. 16 வயது இருக்கையில் ஆஸ்திரேலியாவின் தேசிய அணியில் விளையாடியிருந்தார். பிறகு தனது ஆர்வத்தை கிரிக்கெட் பக்கம் திருப்பினார்
Image Source: x-com
Thanks For Reading!