[ad_1] கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள்!

கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள்!

mukesh M

May 13, 2024

தமிழில் ‘கிரிக்கெட்’ திரைப்படங்கள்!

தமிழில் ‘கிரிக்கெட்’ திரைப்படங்கள்!

சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி விளையாடும் விளையாட்டாக கிரிக்கெட் பார்க்கப்படும் நிலையில், இந்த கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட தமிழ் திரைப்படங்கள் சிலவற்றை பற்றி இங்கு காணலாம்!

Image Source: instagram-com

ப்ளூ ஸ்டார் (2024)

நடிகர் அசோக் செல்வன், சாந்தனு நடிப்பில் வெளியான இத்திரைப்படம் உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். அதேநேரம், சாதிய பிரிவினைகளை தெளிவாக பேசிய ஒரு படமாகவும் உள்ளது!

Image Source: instagram-com

லால் சலாம் (2024)

நடிகர் விஷ்ணு விஷால், விக்ராந்த், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் ஆனது, மக்களின் ஒற்றுமைக்காக விளையாட்டை (கிரிக்கெட்டை) எப்படி பயன்படுத்துவது என பேசிய திரைப்படம் ஆகும்!

Image Source: instagram-com

கனா (2018)

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், சிவகார்த்திகேயன், சத்தியராஜ் உள்ளிட்டோர் நடித்த இத்திரைப்படம் ஆனது, மகளிர் கிரிக்கெட் குறித்தும் - விவசாயத்தின் முக்கியத்துவம் குறித்தும் பேசிய ஒரு திரைப்படம் ஆகும்!

Image Source: instagram-com

ஜீவா (2014)

நடிகர் விஷ்ணு விஷால், சூரி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் கிரிக்கெட் வீரர்கள் சந்திக்கும் புறக்கணிப்பு, துரோகம், ஏமாற்றம் போன்றவற்றை வெளிபடையாக பேசிய திரைப்படம் ஆகும்.

Image Source: instagram-com

சென்னை-28 (2007 & 2016)

இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் இரண்டு பாகங்களாக வெளியான இத்திரைப்படம் நகர வாழ் மக்களின் ‘வீதி கிரிக்கெட்’ மற்றும் நட்புக்குள் நடக்கும் உணர்வு பூர்வமான விஷயங்களை பேசிய ஒரு திரைப்படம்!

Image Source: instagram-com

தோனி (2012)

நடிகர் பிரகாஷ் ராஜ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், கிரிக்கெட் மற்றும் கல்வி (பாடத்திட்டங்கள்ள்) பற்றி பேசிய ஒரு திரைப்படம். மாணவர்களுக்கு கல்வி மட்டும் அவசியம் அல்ல, கல்வியோடு விளையாட்டும் அவசியம் என பேசிய திரைப்படம்!

Image Source: instagram-com

ப்ரியமான தோழி (2003)

நடிகர் மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம், நட்பு - காதல் - கிரிக்கெட் என பல்வேறு விஷயங்களை பேசிய ஒரு திரைப்படம். கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பும் ஒரு இளைஞனின் வாழ்வில் நடக்கும் பாச போராட்டமே இத்திரைப்படம்!

Image Source: instagram-com

I Love You டா (2002)

நடிகர் ராஜ சுந்திரம், சிம்ரன் நடிப்பில் வெளியான இத்திரைப்படம் கிரிக்கெட் சூதாட்டம் குறித்தும், தனி ஒரு கிரிக்கெட் வீரராக இந்த சூதாட்டத்தை முறியடிக்க விரும்பும் நாயகன் குறித்தும் பேசும் திரைப்படம் ஆகும்.

Image Source: instagram-com

Thanks For Reading!

Next: 90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னி 'சன்னி லியோன்' பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

[ad_2]