[ad_1] ​​'கிரிக்கெட் வீரர்' முதல் 'நடிகர்' வரை - விஷ்ணு விஷால் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

​​'கிரிக்கெட் வீரர்' முதல் 'நடிகர்' வரை - விஷ்ணு விஷால் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்!

Anoj, Samayam Tamil

Jul 17, 2024

பிறப்பு

பிறப்பு

தமிழ்நாட்டில் வேலூர் மாவட்டத்தில் 1984 ஜூலை 17 அன்று ரமேஷ் குடவாலா- ஆஷா தம்பதிக்கு மகனாக பிறந்தவர் விஷ்ணு விஷால். இவரது தந்தை ரமேஷ் குடவாலா, தமிழக காவல் துறையில் டிஜிபியாக இருந்து ஓய்வு பெற்றவர்

Image Source: instagram-com/thevishnuvishal

கல்வி விவரம்

வேலூரில் உள்ள தனியார் பள்ளியில் படித்த விஷ்ணு, சென்னையில் உள்ள பிரபல கல்லூரியில் எம்பிஏ பட்டப்படிப்பை முடித்தார்

Image Source: instagram-com/thevishnuvishal

சிறந்த கிரிக்கெட் வீரர்

படிக்கும் போதே கிரிக்கெட் விளையாட்டின் மீது விஷ்ணு விஷாலுக்கு அதிக ஆர்வம் இருந்துள்ளது. கடின உழைப்பால் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் லீக் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றார். ஆனால், காலில் ஏற்பட்ட அடியால் கிரிக்கெட் ஆசை தடைப்பட்டது

Image Source: instagram-com/thevishnuvishal

நடிப்பு ஆர்வம்

காயத்தால் வீட்டில் முடங்கிய விஷ்ணு விஷால், ஏராளமான படங்களை பார்க்கையில் நடிப்பு மீது ஆசை ஏற்பட்டுள்ளது. அவரது உறவினர் ஒருவர், ஏராளமான படங்களில் நடித்திருப்பதால், அவர் உதவியுடன் நடிப்பின் அடிப்படை விஷயங்களை கற்றுகொண்டார்.

Image Source: instagram-com/thevishnuvishal

விஷ்ணு விஷால் முதல் திரைப்படம்

2009ல் வெண்ணிலா கபடி குழு படம் மூலம் கதாநாயகனாக விஷ்ணு விஷால் அறிமுகமானார். விளையாட்டு வீரர் போல் இருப்பதற்காக தினமும் சூரிய வெளிச்சத்தில் சில மணி நேரம் இருந்து உடலில் கருமை உண்டாக்கியுள்ளார். இதுதவிர, 3 மாதங்களுக்கு தினமும் 5 மணி நேரம் கபடி பயிற்சியும் மேற்கொண்டுள்ளார்.

Image Source: instagram-com/thevishnuvishal

நடிப்புக்கான அர்ப்பணிப்பு

கதாபாத்திரங்களுக்காக உடல் தோற்றத்தை மாற்றவும், புதிய திறன்களை கற்கவும் ஒருபோதும் நோ சொல்ல மாட்டார். 2010ல் வெளியான துரோகி படத்தில் முதிர்ச்சியாக தெரியவேண்டும் என்பதற்காக 15 கிலோ உடல் எடையை அதிகரிக்க செய்தார்

Image Source: pexels-com

பிளாக்பஸ்டர் படங்கள்

2 படங்கள் தோல்வி அடைந்ததால் 4 ஆண்டுகள் பிரேக் எடுத்த விஷ்ணு விஷாலுக்கு, அடுத்தடுத்து வெளியான படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. குள்ளநரி கூட்டம், முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, வேலைனு வந்துட்டா வெள்ளைக்காரன், ராட்சன் போன்ற படங்களில் நடித்துள்ளார்

Image Source: instagram-com/thevishnuvishal

திருமண வாழ்க்கை

கல்லூரியில் காதலித்த ரஜினி நட்ராஜ் என்பவரை, 2010ல் விஷ்ணு விஷால் திருமணம் செய்தார். இந்த தம்பதிக்கு ஒரு மகன் இருக்கும் நிலையில், கருத்து வேறுபாட்டால் 2018ல் விவகாரத்து பெற்றனர். பிறகு, 2020ல் பேட்மிட்டன் வீராங்கனை ஜுவாலா குட்டா என்பவரை மறுமணம் செய்துகொண்டார்

Image Source: instagram-com/thevishnuvishal

தயாரிப்பாளர் அவதாரம்

நடிப்பு மட்டுமின்றி அவரது நடிக்கும் பெரும்பாலான படங்களை தயாரிக்கவும் விஷ்ணு விஷால் தொடங்கியுள்ளது. கிரிக்கெட்டில் எண்ட் கார்டு விழுந்தாலும், திரைப் பயணத்தில் க்ரீன் சிக்னலில் முன்னேறி கொண்டிருக்கிறார்

Image Source: instagram-com/thevishnuvishal

Thanks For Reading!

Next: விளையாட்டை மையமாக வைத்து உருவான தென்னிந்திய திரைப்படங்கள்!

[ad_2]