Aug 10, 2024
கிரியேட்டின் என்றால் என்னவென்று தெரியுமா ?, கிரியேட்டின் என்பது நமது உடலில் இயற்கையாகவே உற்பத்தியாகும் ஓர் கலவை. நமது உடலில் இருக்கும் நச்சுக்கள் வெளியேறாமல் உள்ளேயே தங்கி விடும் பட்சத்தில் இதன் அளவானது அதிகரிக்கக்கூடும்.
Image Source: istock
பொதுவாக தசை, பாலினம், வயது, நிறை மற்றும் உடலின் இதர உடல்நல காரணிகளை பொறுத்து இந்த கிரியேட்டின் அளவானது மாறுபடும் என்று கூறப்படுகிறது. ஒரு டெசிலிட்டருக்கு மில்லிகிராம் என்னும் அளவில் இந்த கிரியேட்டின் இயல்பாக அளவிடப்படுகிறது.
Image Source: istock
இளம் வயதில் உள்ள ஆண்களுக்கு கிரியேட்டின் 0.74 முதல் 1.3 mg/dl அளவிலும், இளம்பெண்களுக்கு 0.5 முதல் 1.1 mg/dl என்ற அளவிலும் இருக்க வேண்டுமாம். அதே போல் குழந்தைகளுக்கு இந்த கிரியேட்டின் அளவு 0.2 mg/dl என்ற அளவில் இருக்க வேண்டும், வயதானவர்களுக்கு இதன் அளவு குறைந்தே காணப்படும்.
Image Source: istock
பாடி பில்டர்களுக்கு தசைகள் அதிகமாக இருக்கும், அதன் காரணமாக அவர்களுக்கு கிரியேட்டின் அளவும் அதிகமாக இருக்கக்கூடும். அதே சமயம், தசை கோளாறு ஏதேனும் இருந்தால் அவர்கள் கிரியேட்டின் அளவினை மருத்துவர் அறிவுரைப்படி கணிசமாக குறைத்து கொள்வது நல்லது.
Image Source: istock
நமது உடலில் இந்த கிரியேட்டின் அளவானது அதிகரிக்கும் நிலையில் சிறுநீரகம் பாதிக்கப்படும். மேலும், நமது ரத்தத்தின் கிரியேட்டின் அளவு அளவுக்கு அதிகமாக இருந்தாலோ, கிரியேட்டின் மாத்திரைகளை நாம் எடுத்து கொண்டாலோ சிறுநீரக செயலிழக்கும் அபாயம் உண்டு.
Image Source: istock
கிரியேட்டின் அளவு அதிகரித்தால் இதயம் சார்ந்த நோய்கள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மேலும் சுவாசக்கோளாறுகள் ஏற்படும் என்று கூறப்பட்டாலும் அதற்கான ஆய்வுகளோ, உறுதியான தகவலோ இல்லை.
Image Source: istock
நமது உடலில் கிரியேட்டின் அளவு அதிகமானால் உடல் சோர்வு, குமட்டல், வீக்கம், வாந்தி, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்படும். அதே போல், நமது உடலில் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்தாலும் கிரியேட்டின் அளவு அதிகரிக்க நேரிடும்.
Image Source: istock
கிரியேட்டின் அளவு அதிகமானால் சிறுநீரக பாதை நோய் தொற்றுகள் உண்டாகும் என்று கூறினாலும், அதனை உறுதிப்படுத்தக்கூடிய ஆய்வறிக்கைகள் ஏதும் இல்லை. நாள்பட்ட தொற்று இருந்தால் மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது நல்லது.
Image Source: istock
ஒருவர் கிரியேட்டின் மாத்திரைகளை எடுக்கும் பொழுது, அது கிரியேட்டின் படிவு அபாயத்தினை அதிகரிக்கிறது. இது குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், உடலில் ஏதும் இதற்கான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
Image Source: pexels
Thanks For Reading!