[ad_1] ‘கீல்வாதம்’ பிரச்சனை உள்ளவர்கள் தினசரி வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள்!

Jun 26, 2024

‘கீல்வாதம்’ பிரச்சனை உள்ளவர்கள் தினசரி வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகள்!

mukesh M

மூட்டு வீக்கம் உண்டாக்கும் சிக்கல்கள்!

கீல்வாதம், முடக்கு வாதம் போன்ற மூட்டுகள் தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் தங்கள் தினசரி வாழ்வில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன? இப்பிரச்சனைக்கான தீர்வுகள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

கதவுகளை திறப்பதில் சிரமம்!

வீட்டு கதவுகளை திறப்பது என்பது கைகளின் மூட்டுகளுக்கு அழுத்தம் அளிக்கும் ஒரு வேலை ஆகும். குறிப்பாக முழங்கை பகுதியில் அழுத்தம் உண்டாக்கும் இந்த சிறுவேலை, கீல்வாதம் பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிரமமான ஒரு வேலை ஆகும்.

Image Source: istock

துணிகளை துவைப்பது!

மூட்டுகளில் வீக்கம் - மூட்டு வலி பிரச்சனை உள்ளவர்களுக்கு குத்த வைத்து அமர்ந்து துணிகளை துவைப்பது / அலசுவது என்பது மிகவும் சிரமமான ஒரு காரியம் ஆகும். இந்த பிரச்சனையை சமாளிக்க இவர்கள் washing machine-னை பயன்படுத்தலாம்!

Image Source: pexels-com

குளியல்!

தினசரி குளியல் என்பது கீல்வாதம் (குறிப்பாக சொரியாடிக் கீல்வாதம்) பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிரமமான ஒரு காரியம் ஆகும். தோள்பட்டை, முழங்கைகள் மற்றும் பல உடல் பகுதிகளில் வலியை உண்டாக்கும் இந்த பிரச்சனையை சமாளிக்க, இரண்டாம் நபரின் உதவி நாடுவது நல்லது!

Image Source: istock

பற்களை துலக்குவது!

தாடை மற்றும் கழுத்து பகுதியில் இறுக்கம் என்பது சொரியாடிக் கீல்வாதம் பிரச்சனையின் ஒரு அறிகுறியாகும். இந்த பிரச்சனை காரணமாக காலை எழுந்தவுடன் நாம் செய்யும் பற்துலக்கும் செயல்முறையும் மிகவும் கடினமான ஒன்றாகும்.

Image Source: istock

வாகனம் ஓட்டுவது!

கீல்வாதம், மூட்டு அழற்சி போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு வாகனத்தை இயக்குவது என்பது கடினமான ஒரு விஷயமாகவே உள்ளது. வாகனத்தை இயக்கும்போது கழைத்து அசைக்க முடியாமல், எதிர்பாராத விபத்துக்களை சந்திக்கும் வாய்ப்பு இங்கு அதிகம்!

Image Source: istock

கைபேசியில் பேசுவது!

கைபேசியை காதுக்கு அருகில் எடுத்து செல்ல, கை மூட்டுகளை முழுமையாக வளைப்பது அவசியமாக இருக்கும் நிலையில், இந்த எளிய உடல் இயக்கத்தை மூட்டு வீக்கம் பிரச்சனை உள்ளவர்களால் செய்ய முடிவது இல்லை. இந்த பிரச்சனையை சமாளிக்க Loudspeaker அம்சம் உதவியாக இருக்கும்

Image Source: istock

காபி பருகுதல்!

இதேப்போன்று காபி, தேநீர் உள்ளிட்ட பாடங்களை பருகுவதும், உணவுகளை உட்கொள்வதும் கை மூட்டுகளின் வளைவை எதிர்பார்க்கும் சில வேலைகள் ஆகும். இந்த எளிய வேலைகளையும் மூட்டு வீக்கம் பிரச்சனை உள்ளவர்களால் செய்ய முடிவது இல்லை.

Image Source: istock

டீ-சர்ட் அணிவது!

டீ-சர்ட் அணியும் போது நாம் நமது முழங்கை மூட்டுகளுக்கு அதிக அழுத்தம் அளிக்கிறோம். கீழ்வாதம் பிரச்சனை உள்ளவர்களால் இந்த அழுத்தத்தை சமாளிக்க முடிவது இல்லை. எனவே, இவர்கள் டீ-சர்டுக்கு பதிலாக பொத்தான் சட்டைகளை உடுத்தலாம்!

Image Source: istock

Thanks For Reading!

Next: காலை உணவாக 'வேர்க்கடலை வெண்ணெய்' சாப்பிடுவதன் நன்மைகள்

[ad_2]