[ad_1] குளியலறையில் மணி பிளாண்ட் வைக்க என்ன காரணம் ?

குளியலறையில் மணி பிளாண்ட் வைக்க என்ன காரணம் ?

Aug 21, 2024

By: Nivetha

மணி பிளாண்ட்

நம்முள் பலரது வீட்டில் மணி பிளாண்ட் வைத்திருப்போம், ஏனெனில் இதற்கு பெரியளவில் இடமோ, அதிகளவு பராமரிப்போ தேவைப்படுவதில்லை. மேலும் இதனை வீட்டில் வைத்தால் பண வரவு அதிகரிக்கும், செல்வம் கொழிக்கும் என்று நம்பப்படுகிறது.

Image Source: istock

பராமரிப்பு

ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து நீரை நிரப்பி வைத்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை அந்த தண்ணீரை மாற்றினாலே மணி பிளாண்ட் நன்றாக வளரும். மேலும் இதற்கு அதிகளவு சூரிய வெளிச்சமும் தேவைப்படுவதில்லை. பகுதியளவு சூரிய வெளிச்சம் இருந்தால் போதுமானது.

Image Source: istock

வைக்குமிடம்

மணி பிளாண்ட் பெரும்பாலும் வீட்டிற்குள் இருக்கும், ஒருசிலர் வசதியாக இடங்கள் இருக்கும் பட்சத்தில் அதனை கொடி போல் வெளியே படர விட்டிருப்பார்கள். ஆனால் இன்னும் சிலர் இந்த செடியை குளியலறையில் வைத்து வளர்க்கிறார்கள். இதற்கு என்ன காரணம் என்பது பலருக்கும் தெரியாது. அது குறித்து நாம் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

Image Source: istock

நிதி விரிவாக்கம்

மணி பிளாண்ட்டை குளியலறையில் வைத்து வளர்த்தால் நிதி விரிவாக்கத்தை ஊக்குவிக்கிறது என்று நம்பப்படுகிறது. மேலும் குளியலறை என்பது ஈரப்பதமான பகுதி என்பதால் இங்கு வைக்கப்படும் செடிகள் நன்கு வளரும்.

Image Source: istock

காற்றின் தரம்

மணி பிளாண்ட்டில் ஃபார்மால்டிஹைடு, பென்சீன், ஸைலீன் போன்ற குளியலறையில் இருக்கும் அசுத்தங்களை நீக்கும் தன்மை அதிகம். எனவே இதனை அங்கு வைத்து வளர்ப்பதால் அந்த அசுத்தங்களை நீக்கி, காற்றின் தரத்தை மேம்படுத்தி நமக்கு கொடுக்க உதவுகிறது.

Image Source: istock

ரிலாக்ஸ்

நமது குளியலறையில் இந்த மணி பிளாண்ட் இருப்பதால் பல டென்ஷன்களுக்கு மத்தியில் நாம் அதனை பார்க்கும் பொழுது நமது மனதில் இருக்கும் கோபங்கள், கவலைகள் அனைத்தையும் நீக்கி மன அமைதியை கொடுத்து நம்மை ரிலாக்ஸாக இருக்க உதவும்.

Image Source: istock

எதிர்மறை ஆற்றல்

குளியலறையில் மணி பிளாண்ட் இருந்தால் வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கும் என்ற நம்பிக்கை பலரது மனதில் உள்ளது. மேலும் இது ஒரு வித அழகினை நமது குளியலறைக்கு கொடுக்கும் என்றும் கருதப்படுகிறது.

Image Source: istock

திசைகள்

ஒரு நம்பிக்கையின் பேரில் நீங்கள் மணி பிளாண்டை உங்கள் குளியலறையில் வைக்கிறீர்கள் என்றால், இதனை ஒரு குறிப்பிட்ட திசைகளில் தான் வைக்க வேண்டுமாம். அதன்படி, வடக்கு, மேற்கு, கிழக்கு, தென்கிழக்கு உள்ளிட்ட திசைகளை நோக்கி வைக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

Image Source: istock

மூட நம்பிக்கை

இந்த மணி பிளாண்ட்டை பல நம்பிக்கைகளின் பேரில் வளர்க்கும் நிலையில், இதனை விலை கொடுத்து வாங்குவதை விட யாரிடமிருந்தாவது அவர்களுக்கு தெரியாமல் எடுத்து கொண்டு வந்து வீட்டில் வைத்து வளர்த்தால் தான் பணம் பெருகும் என்னும் மூட நம்பிக்கை நிலவுகிறது.

Image Source: pexels

Thanks For Reading!

Next: கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு தாடை வலி வருவது ஏன் தெரியுமா?

[ad_2]