Jun 3, 2024
By: mukesh Mதற்போது குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம், கொடுக்க கூடாது என்பதை குறித்து பல கட்டுக்கதைகள் சமூக வலைதளத்தில் நம்மால் பார்க்க முடியும். இணையத்தில் பரவிவரும் இந்த தகவல்களில் எதை நம்புவது, எதை தவிர்ப்பது என இங்கு காணலாம்!
Image Source: istock
குழந்தைகள் போதும் என்று சொல்லும் போது உணவு கொடுப்பதை நிறுத்தி விட வேண்டும். கடைசி வாயில் சத்து உள்ளது என்று அம்மாக்கள் பலரும் அவர்களை வற்புறுத்திக் கொடுக்கும் உணவுமுறை ஒரு ஆரோக்கியமற்ற உணவு பழக்கமாகும்.
Image Source: istock
கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் என்ற தகவல் இணையத்தில் பரவி வருகிறது. ஆனால் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்திற்கு கொழுப்பு சத்து மிகவும் அவசியம். ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளான மீன் மற்றும் வெண்ணெய் போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Image Source: istock
குழந்தைகளின் வளர்ச்சிக்கு பழங்கள் மற்றும் காய்கறிகள் மிகவும் அவசியம். இவற்றில் வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார் சத்துக்கள் நிரம்பியுள்ளதால் அவை குழந்தை வளர்ச்சியில் முக்கிய பங்கு வைக்கிறது. பெரியவர்களை விட குழந்தைகளுக்கு தான் பழங்கள் மற்றும் காய்கறிகளின் தேவை அவசியம்.
Image Source: istock
தற்போது விளம்பரங்களில் பல ஸ்போர்ட்ஸ் ட்ரிங்க்ஸ் குழந்தைகளின் உடலுக்கு அத்தியாவசியம் என விளம்பரம் செய்யப்படுகின்றன. அவற்றில் செயற்கையான சர்க்கரைகள் அதிகமாக உள்ளதால் அது குழந்தைகளுக்கு அத்தியாவசியமற்றது. நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் இருக்க குழந்தைகள் தண்ணீர் குடிப்பதே போதுமானது.
Image Source: istock
குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவுகளாக தேர்ந்தெடுத்து அளவாக பரிமாற வேண்டும். உருளைக்கிழங்கு உள்ள பொட்டாசியம், ஆரஞ்சு மற்றும் திராட்சைகளில் உள்ள வைட்டமின் சி போன்று உணவுகளை தேர்ந்தெடுத்து உட்கொள்ள கொடுக்க வேண்டும்.
Image Source: istock
முழு தானிய உணவுகளை விட மல்டிகிரைன் உணவுகள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து அளிப்பதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. ஆனால் உண்மையில் முழு தானிய உணவுகள் குழந்தையின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே ஷாப்பிங் செய்யும் போது முழு தானியங்கள் உள்ள உணவுகளை தேர்ந்தெடுத்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
Image Source: istock
குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்கள் வளர்ச்சியில் கால்சியம் முக்கிய பங்கு வகிக்கிறது. கால்சியம் சத்துக்கு பால் தான் கொடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கால்சியம் நிறைந்த மற்ற உணவுப்பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். பீன்ஸ் மற்றும் ஓட்ஸ் உணவுகளில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது.
Image Source: pexels-com
குழந்தைகள் சர்க்கரை நிறைந்த உணவுகளை உட்கொள்ளக் கூடாது என்ற கட்டுக்கதையும் நிலவுகிறது. ஆனால் உண்மையில் இயற்கையாக சர்க்கரை நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட சர்க்கரை உணவுகளை மட்டுமே தவிர்க்க வேண்டும்.
Image Source: istock
Thanks For Reading!