Jun 11, 2024
விளையாடும் பருவத்தில் உள்ள குழந்தைகள் வீட்டிற்கு வெளியே விளையாடுவதும், உடற்பயிற்சி செய்வதும் ஆரோக்கியமான ஒன்று என்றாலும், தற்போதைய அதிக வெப்ப நிலை அவர்களுக்கு ஏதேனும் அபாயத்தினை ஏற்படுத்தக்கூடும் என்று கூறப்படுகிறது.
Image Source: pexel-com
அதிக வெப்பநிலை நிலவுவதால் குழந்தைகளுக்கு அதிக வியர்வை காரணமாக நீரிழப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உடலின் நீர்சத்து குறைகிறது. குமட்டல், வாந்தி, தலைவலி போன்ற உபாதைகளும் அவர்களுக்கு ஏற்படும்.
Image Source: pexels-com
நமது உடலின் ரத்த குழாய்களில் உள்ள நீர் மற்றும் உப்பின் சம அளவு மாறுபடும் பொழுது நீரிழப்பு ஏற்படுகிறது. உடலில் நீர் வற்றி போவதால் மூளை முதல் இதயம் வரை அனைத்து செயல்பாடுகளும் பாதிக்கிறது. எனவே, தண்ணீர் அதிகம் குடிப்பது நல்லது.
Image Source: pexel-com
வெப்ப அலைகள் அதிகமுள்ளதால் உடலில் வியர்வை அதிகளவில் ஏற்பட்டு எலக்ட்ரோலைட் சமநிலை இல்லாமைக்கு வழிவகுக்கிறது. உடலின் சோடியம் அளவு குறையும் பொழுது இப்பாதிப்பு ஏற்படுகிறது.
Image Source: pixabay
எலக்ட்ரோலைட் சமநிலை இல்லாமல் ஏற்றத்தாழ்வு ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடலின் பாதிப்படைய செய்யலாம். இந்நிலை குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தத்திற்கு வழிவகுப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
Image Source: pexel-com
அதிக வெப்பநிலை காரணமாக உடலிலுள்ள அட்ரினலின், கார்டிசோல் உள்ளிட்ட மனஅழுத்த ஹார்மோன்கள் தூண்டப்படுகிறது. இது குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.
Image Source: pexel-com
அதிக வெப்ப நிலை குழந்தைகளின் தினசரி தூக்கத்தில் பாதிப்பினை ஏற்படுத்தி தூக்கத்தை கெடுக்கிறது. போதுமான தூக்கம் இல்லாததால் குழந்தைகளுக்கு ரத்த அழுத்தம் அதிகரிப்பதோடு மனக்கவலையும் ஏற்படும்.
Image Source: pexel-com
அதிக வெப்பநிலை காரணமாக காற்று மாசுபாடு, ஒவ்வாமை உள்ளிட்டவைகளை அதிகரித்து சுவாச கோளாறுகளை ஏற்படுத்தக்கூடும். இந்த சுவாசக்கோளாறு காரணமாக மனக்கவலை அதிகரித்து ரத்த அழுத்தத்திற்கு வழிவகுக்கும்.
Image Source: pexel-com
குழந்தைகளுக்கு இந்த அதிக வெப்பநிலை காரணமாக தூக்கமின்மை, நீரிழப்பு, மனக்கவலை போன்ற நிலைகள் தொடர்ந்தால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது மூலம் ரத்த அழுத்தம் ஏற்படுவதை தடுக்கலாம்.
Image Source: pexels-com
Thanks For Reading!