Aug 15, 2024
காபியில் காஃபைன் என்ற பொருள் உள்ளது. இதை அதிக அளவில் எடுத்துக் கொள்ளும் போது நாம் நிறைய பாதிப்புகளை சந்திக்க நேரிடலாம். எனவே குழந்தைகள் காபியை எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
Image Source: pexels-com
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காபி கொடுக்க கூடாது. பெரியவர்கள் மற்றும் இளம் பருவத்தினரும் குறிபிட்ட அளவு மட்டுமே காபியை எடுத்துக் கொள்ள வேண்டும். அதே மாதிரி உயர் தரமான காபி பீன்ஸ்களை எடுப்பது நல்லது.
Image Source: pexels-com
குழந்தைகளுக்கு சிறு வயதில் காபி கொடுப்பதால் அதிலுள்ள காஃபின் குழந்தைகளின் மத்திய நரம்பு மண்டலத்தை பாதிக்கும். விழிப்புணர்வு அதிகரிப்பு மற்றும் ஆற்றல் அதிகரிப்பு ஏற்படலாம். சிறுநீர் வெளியேற்றத்தை அதிகரிக்கும்.
Image Source: pexels-com
காபி வயிற்றில் அமிலத்தன்மையை அதிகரித்து வயிற்று உபாதையை ஏற்படுத்தும். கால்சியம் உறிஞ்சுதலில் இடையூறை ஏற்படுத்தும். இரத்த அழுத்தம் மற்றும் இதயத் துடிப்பை அதிகப்படுத்தும்.
Image Source: pexels-com
உணவு எடுத்துக் கொள்வதற்கு 1/2 மணி நேரம் முதல் 4 மணி நேரம் வரை காபி உட்கொள்வது பசியைக் குறைக்கிறது. இதனால் குழந்தைகளுக்கு பசி ஏற்படாது.
Image Source: istock
அமெரிக்க உளவியல் சங்கத்தின் படி, அதிகளவு காஃபின் எடுத்துக் கொள்வது குழந்தையின் முதிர்ச்சியடையாத நரம்பியல் அமைப்புகளை தூண்டி கவனச் சிதறல், பதட்டம் மற்றும் கவலைகளை ஏற்படுத்துகிறது.
Image Source: istock
காபியில் இனிப்பு அதிகமாக இருப்பதால் பற்சொத்தை ஏற்பட வாய்ப்புள்ளது. இது பாக்டீரியா வளர்ச்சியை உருவாக்கி பற்சொத்தையை உண்டாக்குகிறது. இதனால் குழந்தைகள் சீக்கிரமே பற்சொத்தையை சந்திக்கின்றனர்.
Image Source: istock
அதிகளவு காஃபின் எடுப்பது கால்சியம் உறிஞ்சும் தன்மையை குறைக்கிறது. இதனால் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சி பாதிப்படைய வாய்ப்பு உள்ளது.
Image Source: pexels-com
காபியை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வரும் போது அதில் அடிக்ஷன் ஏற்படலாம். இதனால் குழந்தைகள் காபி அருந்தும் பழக்கத்தை கைவிடுவது கஷ்டமாக இருக்கலாம்.
Image Source: pexels-com
Thanks For Reading!
Find out More