Jun 28, 2024
குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சியில் ஜிங்க்-ன் இருப்பு இன்றியமையாத ஒன்றாக இருக்கும் நிலையில், குழந்தைகளுக்கு ஜிங்க் நிறைந்த உணவுகளின் நன்மை - தீமை என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!
Image Source: istock
வளரும் குழந்தைகளின் நோய் எதிர்பு சக்தியை மேம்படுத்துவதில் ஜிங்க் முக்கியப்பங்கு வகிக்கிறது. அந்த வகையில் குழந்தை பருவத்தில் உண்டாகும் கிருமி தொற்று, பருவ கால தொற்றுகளை எதிர்த்து போராட குழந்தைகளுக்கு உதவி செய்கிறது.
Image Source: istock
அழற்சி எதிர்ப்பு பண்பு கொண்ட ஜிங்க், சரும கொலாஜன் அளவு உற்பத்தியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. அந்த வகையில் குழந்தைகளின் சரும வறட்சி, தடிப்ப உள்ளிட்ட பிரச்சனைகளை தடுத்து, சரும ஆரோக்கியம் காக்க உதவுகிறது.
Image Source: istock
குழந்தைகளின் சீரான வளர்சிதை மாற்றத்தை உறுதி செய்வதில் ஜிங்க் முக்கியப் பங்கு வகிக்கிறது. குழந்தைகளின் ஆரோக்கிய வளர்ச்சிக்கும், ஆரோக்கிய உடல் எடை பராமரிப்புக்கும் - சீரான வளர்சிதை மாற்றம் அவசியமாகும்!
Image Source: istock
சூரியனின் புற ஊதா கதீர்வீச்சில் இருந்து பாதுகாக்கும் பண்பு ஜிங்கில் காணப்படுகிறது. அந்த வகையில் வெளியில் விளையாடும் குழந்தைகளை UV சேதங்களில் இருந்து பாதுகாக்க இந்த ஜிங்க் உணவுகளை போதுமான அளவு அளிக்கலாம்.
Image Source: istock
குழந்தை வளர்ப்பில் பெற்றோர் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால், குழந்தைகளுக்கு உணவு அளிப்பது. இந்நிலையில் இந்த ஜிங்க் நிறைந்த உணவுகள், குழந்தைகளின் பசியை தூண்டி, இந்த சவாலை சமாளிக்க உதவுகிறது!
Image Source: pexels-com
நரம்பு மண்டல ஆரோக்கியம் காப்பதில் ஜிங்க் உணவுகளின் பங்கு இன்றியமையாதது. அந்த வகையில் இந்த ஜிங்க் உணவுகள் குழந்தைகளின் மூளை ஆரோக்கியம் காப்பதோடு, நினைவாற்றலையும் மேம்படுத்துகிறது.
Image Source: istock
விதை - நட்ஸ் வகைகள், முட்டை, பால் பொருட்கள், முழு தாணியங்கள், சிவப்பு இறைச்சி போன்றவை ஜிங்க் சத்தின் சிறந்த ஆதாரமாக உள்ளன. எனவே, உங்கள் குழந்தையின் உணவு வழக்கத்தில் இவற்றை சேர்த்துக்கொள்வது நல்லது!
Image Source: istock
ஜிங்க் நிறைந்த உணவுகளை குழந்தைகளுக்கு அளவுக்கு மிகுதியாக அளிப்பது ஊட்டச்சத்து சமநிலையின்மைக்கு வழிவகுப்பதோடு, ஒவ்வாமை, வாந்தி - குமட்டல், வயிற்று உபாதைகளுக்கும் வழிவகுக்கும். எனவே, இந்த ஜிங்க் உணவுகளை அளவாக அளிப்பது நல்லது!
Image Source: istock
Thanks For Reading!