May 11, 2024
கோடை காலத்தில் அதிகம் விற்பனையாகும் பழங்களில் ஒன்று தர்பூசணி. அனைவரும் விரும்பி உண்ணும் இந்த தர்பூசணியை குழந்தைகளுக்கு அளிப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன? ஆபத்துக்கள் என்ன? என்று இங்கு காணலாம்!
Image Source: pexels-com
தர்பூசணியில் முக்கால்வாசிக்கும் மேல் அதாவது சுமார் 92 சதவிகிதம் நீர் நிரம்பியுள்ளது. இது கோடை காலத்தில் குழந்தைகளின் உடலில் நீர்ச்சத்து குறைபாடு ஏற்படாமல் நீரேற்றமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
Image Source: istock
தர்பூசணியில் வைட்டமின் ஏ, பி1, பி6 மற்றும் வைட்டமின் சி உள்ளிட்ட நமது உடலுக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளும் நிரம்பியுள்ளது. இவை குழந்தைகளின் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
Image Source: istock
தர்பூசணியில் நிரம்பியுள்ள மேற்குறிப்பிட்ட வைட்டமின்கள் குழந்தைகளின் உடலில் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், தசைகளில் ஏற்படும் வலியை குறைக்கவும் உதவுகிறது. மேலும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க இது உதவுகிறது.
Image Source: istock
தர்பூசணியில் ஆன்ட்டிஆக்சைடன்கள் அதிக அளவில் உள்ளது. அவை உடலில் தீங்கு விளைவிக்கும் மூலக்கூறுகளை நீக்க உதவுகிறது. இந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் புற்றுநோய் மற்றும் இதய நோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
Image Source: istock
தர்பூசணி சிவப்பாக இருப்பதற்கு காரணம் இந்த லைகோபீன். இதில் நல்ல கொழுப்பு நிறைந்துள்ளதால் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. இதனால் இதயம் சார்ந்த நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்க தர்பூசணியில் உள்ள லைகோபின் உதவுகிறது.
Image Source: istock
தர்பூசணியில் உள்ள பைட்டோஸ்டெரால்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நிர்வகித்து உயர் அழுத்தம் மற்றும் இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது.
Image Source: istock
எந்த ஒரு உணவாக இருந்தாலும் அளவாக உட்கொள்ளும் போது அது ஆரோக்கியமானது. ஒரு உணவு அளவுக்கு அதிகமாகும் போது ஏற்படும் பக்க விளைவுகள் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
Image Source: istock
என்னதான் குழந்தைகளுக்கு தர்பூசணி மிகவும் பிடித்தமான பழமாக இருந்தாலும், அளவுக்கு அதிகமாக உட்கொள்ளுதல் செரிமான பிரச்சனைகளை ஏற்படுத்தும். இதனால் வாயு தொல்லை, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
Image Source: istock
Thanks For Reading!