May 15, 2024
By: mukesh Mவளரும் குழந்தைகளுக்கு பாஸ்தா மிகவும் பிடித்த உணவாக உள்ளது. இந்நிலையில் இந்த பாஸ்தாவை உங்கள் குழந்தைக்கு எந்த வயதில் அறிமுகம் செய்யலாம்? எப்படி அறிமுகம் செய்யலாம்? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: pexels-com
உங்கள் குழந்தைக்கு கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் பாஸ்தாவை சமைத்து கொடுக்கலாம். இதில் கோதுமை, அரிசி, பார்லி மற்றும் பருப்பு வகைகள் சேர்த்து சமைப்பதால் அவர்களின் ஆரோக்கியம் மேம்பட உதவுகிறது.
Image Source: istock
முழு கோதுமையில் இருந்து தயாரிக்கப்படும் பாஸ்டாவில் இரும்பு சத்து மற்றும் வைட்டமின் பி1 சத்து வைட்டமின் பி2 வைட்டமின் பி3 மற்றும் போலேட் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. 100 கிராம் முழு கோதுமை பாஸ்டாவில் 29.9 கார்போஹைட்ரேட், 5.95 புரதச்சத்து மற்றும் 3.9 நார்ச்சத்து நிறைந்துள்ளது.
Image Source: istock
6 மாத குழந்தைக்கு கூட பாஸ்தா சாப்பிட கொடுக்கலாம். ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு காய்கறி இந்த பூசணி. பூசணி பாஸ்தா செய்முறை இதோ.
Image Source: istock
அரை கப் சமைத்த கோதுமை பாஸ்டா ஒரு கப் பூசணி 5 கப் பால் 40 கிராம் ஸ்வீட் கார்ன் 3 டேபிள் ஸ்பூன் துருவிய சீஸ் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய்
Image Source: istock
ஒரு சிறிய பாத்திரத்தில் பால் மற்றும் பூசணியை மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு இதில் ஸ்வீட் கார்ன் சேர்த்து 10 நிமிடம் சமைக்க வேண்டும்.
Image Source: istock
பூசணிக்காய் பாலுடன் சேர்ந்து நன்கு வெந்து வந்ததும், இப்போது சீஸ் மற்றும் சமைத்த பாஸ்தாவை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
ஒரு சிறிய கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய் சேர்த்து நாம் அரைத்து வைத்த பாஸ்டாவையும் பாலில் கொதித்த பூசணி சேர்த்து சுமார் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் வரை கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
Image Source: istock
இப்போது இந்த பூசணி பாஸ்தாவை அடுப்பில் இருந்து இறக்கி விட்டு சூடு ஆறியதும் குழந்தைகளுக்கு ஊட்டி விடலாம்.
Image Source: istock
Thanks For Reading!