Jun 19, 2024
By: Anojவளரும் குழந்தைகளுக்கு புரோட்டீன் மிகவும் அவசியமான சத்தாகும். அது தசை வளர்ச்சிக்கும், எலும்பு ஆரோக்கியத்திற்கும் உதவக்கூடும். அவற்றை குழந்தைகளின் தினசரி உணவு முறையில் சேர்க்கும் வழிகளை பற்றி இங்கு காணலாம்
Image Source: istock
பாலில் புரோட்டீன் உள்ளடக்கம் நிறைந்துள்ளது. ஆனால், சில குழந்தைகள் பால் குடிக்க மறுப்பது உண்டு. அவர்களுக்கு பாலை அப்படியே கொடுக்காமல் ஸ்மூத்தி வடிவில் அளிக்க செய்யுங்கள். பாலுடன் சியா விதை அல்லது பழங்களை சேர்ப்பது கூடுதல் சத்துக்களை தரக்கூடும்
Image Source: istock
முட்டையில் புரதச்சத்து மட்டுமின்றி அமினோ அமிலங்களும் உள்ளது. அதனை காலை உணவாக சாப்பிடுவது சிறந்த முடிவாகும். அவித்த முட்டை சாப்பிட குழந்தைகளுக்கு பிடிக்காத பட்சத்தில், ஆம்லெட், முட்டை வறுவல் போன்றவற்றை முயற்சிக்கலாம்
Image Source: istock
சிக்கன் போன்ற மெலிந்த இறைச்சிகளை, தினசரி உணவு முறையில் சேர்க்க செய்யலாம். சிக்கன் குழம்பு, சிக்கன் சூப், சிக்கன் ஸ்டூ என பல வகைகளில் தயார் செய்து அளிக்கலாம்
Image Source: istock
ப்ரோபயாடிக் தன்மை கொண்ட தயிர், குடலில் நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து செரிமான ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும். அதில் புரதச்சத்தும் அதிகமாக உள்ளது. குழந்தைகளுக்கு தயிருடன் பழங்களை சேர்த்து சாப்பிட கொடுக்கலாம்
Image Source: pexels-com
புரதச்சத்தின் சிறந்த ஆதாராமாக மீன் திகழ்கிறது. குழந்தைகள் எளிதாக சாப்பிடும் வகையில், முள் இல்லாத மீனை தேர்ந்தெடுக்க வேண்டும். அவர்கள் கேட்டு சாப்பிடும் வகையில், பிஷ் பிங்கர் போன்றவற்றையும் முயற்சிக்கலாம்
Image Source: istock
நட்ஸ் மற்றும் விதைகள், புரோட்டீன் சத்தின் சிறந்த ஆதாரமாகும். அவற்றில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்களும் உள்ளது. இதனை குழந்தைகளுக்கு உணவுக்கு இடையே ஸ்நாக்ஸாக தர செய்யலாம்
Image Source: istock
வேர்க்கடலை வெண்ணெய் குழந்தைகளுக்கு விருப்பமான உணவாகும். அது புரதச்சத்தின் நல்ல மூலமாகும். அவற்றை பிரெட்டில் தடவி குழந்தைகளுக்கு காலை உணவாக சாப்பிட கொடுக்கலாம்
Image Source: istock
4 முதல் 8 வயது குழந்தைக்கு 19 கிராம் புரோட்டீனும், 9 முதல் 13 வயதுக்கு 34 கிராம் புரோட்டீனும் தேவைப்படக்கூடும். அவை உடலில் போதுமான அளவு இல்லாத பட்சத்தில், குழந்தைகளுக்கு தசைகளில் வலி உண்டாகுவதோடு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகவும் வாய்ப்புள்ளது
Image Source: istock
Thanks For Reading!