[ad_1] குழந்தைகளை தாக்கும் ஜிங்க் குறைபாடு - கண்டறிவது எப்படி?

குழந்தைகளை தாக்கும் ஜிங்க் குறைபாடு - கண்டறிவது எப்படி?

Jun 11, 2024

By: mukesh M

குழந்தைகளுக்கு ஜிங்க் குறைபாடு!

குழந்தைகளுக்கு உண்டாகும் ஊட்டச்சத்து குறைபாடுகளில் முக்கிய பங்கு வகிப்பது ஜிங்க் குறைபாடு. இந்த ஜிங்க் குறைபாட்டின் பாதிப்புகள் என்ன? அறிகுறிகள் என்ன? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

வளர்ச்சி குறைபாடு!

உடல் எலும்புகளின் நீட்சிக்கு ஜிங்க் அவசியமான ஒரு ஊட்டமாக உள்ளது. இந்நிலையில் இந்த ஊட்டத்தின் தட்டுப்பாடு உண்டாகும் போது, எலும்புகள் ஆரோக்கியம் பாதிப்பதோடு, வளர்ச்சி குறைபாடு ஏற்புடும் வாய்ப்பும் அதிகரிக்கிறது.

Image Source: istock

கிருமி தொற்றுகள்!

ஜிங்க் குறைபாடு உள்ள குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலுவிழக்கிறது. இதன் விளைவாக குழந்தைகள் அடிக்கடி கிருமி தொற்றுகளையும், கிருமி தொற்றுகளால் உண்டாகும் சளி, காய்ச்சல் பிரச்சனைகளையும் எதிர்கொள்ள கூடும்.

Image Source: pexels-com

நினைவாற்றல் பிரச்சனைகள்!

குழந்தைகள் எதிர்கொள்ளும் ஜிங்க் தட்டுப்பாடு ஆனது அவர்களின் நரம்பு மண்டல ஆரோக்கியத்தை பாதிக்கிறது. அந்த வகையில்ம மூளை ஆரோக்கியம் பாதித்து, நினைவாற்றல் - அறிவாற்றல் பிரச்சனைக்கு வழிவகுக்க கூடும்!

Image Source: istock

ஆற்றல் இழப்பு!

உண்ணும் உணவை ஆற்றலாக மாற்றுவதில் ஜிங்க் பங்களிப்பு அதிகம். இந்நிலையில் இந்த ஊட்டத்தின் தட்டுப்பாடு ஆனது, ஆற்றல் சுழற்சியை பாதித்து, அடிக்கடி உடல் சோர்வு, தொய்வு போன்ற பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.

Image Source: istock

பசியின்மை!

பசியை தூண்டும் ஒரு ஊட்டமாக ஜிங்க் பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த ஊட்டச்சத்தின் குறைபாடு ஆனது, பசியை கட்டுப்படுத்தி பசியின்மையால் உண்டாகும் பல்வேறு பிரச்சனைக்கு வழிவகுக்கிறது.

Image Source: istock

வயிற்று உபாதைகள்!

ஆய்வுகளின் படி குழந்தைகளின் உடலில் உண்டாகும் இந்த ஜிங்க் குறைபாடு ஆனது, அவர்களின் செரிமான மண்டலத்தை பாதித்து வயிற்று போக்கு உள்ளிட்ட வயிற்று உபாதைகளுக்கு வழிவகுக்கும்.

Image Source: istock

தலைமுடி உதிர்வு!

வளரும் குழந்தைகள் எதிர்கொள்ளும் கூந்தல் உதிர்வு பிரச்சனை ஆனது அவர்களின் உடலில் ஜிங்க் தட்டுப்பாடு உண்டாவதால் இருக்கலாம் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Image Source: istock

தீர்வு காண்பது எப்படி?

ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமான உணவு வழக்கத்தின் மூலம் இந்த ஜிங்க் தட்டுப்பாட்டினை நாம் தவிர்க்கலாம். எனவே, உங்கள் குழந்தைக்கு ஜிங்க் நிறைந்த ஆரோக்கியமான உணவுகளை அளிக்க தவறாதீர்கள்!

Image Source: istock

Thanks For Reading!

Next: உலகளவில் காபியின் பிற வகைகள் என்னென்ன ?

[ad_2]