Jul 5, 2024
By: Anojகுழந்தைகளின் வளர்ச்சியில் வைட்டமின்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. அவை உடலில் எவ்வித குறைபாடுகளும் ஏற்படாமல் பாதுகாக்க செய்கிறது. குழந்தைகளுக்கு என்ன மாதிரியான வைட்டமின்கள் தேவைப்படும் என்பதை இங்கு பார்க்கலாம்.
Image Source: pexels-com
வைட்டமின் ஏ குறைபாடு, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பலவீனமாக்குவதால் தீவிரமான நோய் பாதிப்புக்கு ஆளாக நேரிடும். அதேபோல், பார்வை திறன் குறைவதற்கான வாய்ப்புள்ளது. முட்டை, பச்சை இலை காய்கறிகள், பால் தயாரிப்பு மற்றும் முட்டை ஆகியவை வைட்டமின் ஏ-ன் சிறந்த ஆதாரமாகும்
Image Source: istock
1 முதல் 3 வயது குழந்தைக்கு தினசரி 0.5 மில்லிகிராம் வைட்டமின் பி அவசியமாகும். அதேநேரம், 4 முதல் 8 வயது குழந்தைக்கு 0.6 மில்லிகிராம் தேவைப்படுகிறது. வைட்டமின் பி குறைபாடு குழந்தைகளை பலவீனமாக மாற்றக்கூடும்
Image Source: istock
மீன் மற்றும் கடல் உணவுகளில் வைட்டமின் பி அதிகமாக உள்ளது. அதேபோல், ஆப்பிள், வாழைப்பழம், அவகோடாவில் வைட்டமின் பி நிறைந்திருப்பதாக கூறப்படுகிறது
Image Source: istock
நிபுணர்களின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு 50 மில்லிகிராம் வைட்டமின் சி தேவைப்படுகிறது. வைட்டமின் சி குறைபாடு எலும்பு வளர்ச்சியை பாதிப்பதோடு திசு குறைபாடுகளுக்கு வழிவகுக்கும்
Image Source: istock
குழந்தைகளுக்கு தினமும் அரை கொய்யா பழம் சாப்பிட கொடுப்பதை உறுதி செய்யுங்கள். இதுதவிர, தினசரி உணவில் ப்ரோக்கோலி சேர்ப்பதும் நல்ல பலனை தரக்கூடும்
Image Source: istock
குழந்தைகள் அடிக்கடி காலில் வலி இருப்பதாக சொல்வது, வைட்டமின் டி குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். பிறந்து 12 மாதங்களுக்கு குறைவான குழந்தைகளுக்கு தினமும் 400IU தேவைப்படுகிறது.
Image Source: istock
சூரிய ஒளி வைட்டமின் டி பெற சிறந்த வழியாகும். குழந்தையை அதிகாலையில் எழுப்பி, உடலில் எண்ணெய் தடவி, வெளியே விளையாட அறிவுறுத்துங்கள் அல்லது சூரிய ஒளியில் சிறிது நேரம் அமர வைக்க செய்யுங்கள்
Image Source: istock
குழந்தைகளுக்கு 3 வயதை எட்டும் வரை, தினமும் 9 IU வைட்டமின் ஈ மட்டுமே தேவைப்படுகிறது. சூரியகாந்தி விதை, பாதாம், சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஆகியவற்றில் வைட்டமின் ஈ நிறைந்துள்ளது
Image Source: istock
Thanks For Reading!