[ad_1] குழந்தைகள் ஏன் பச்சை நிறத்தில் மலம் கழிக்கிறார்கள்? தெரியுமா?

குழந்தைகள் ஏன் பச்சை நிறத்தில் மலம் கழிக்கிறார்கள்? தெரியுமா?

Jun 11, 2024

By: mukesh M

குழந்தைகள் பச்சை நிறத்தில் மலம்!

குழந்தைகள் சிலர் - ஒரு சில நேரங்களில் பச்சை நிறத்தில் மலம் கழிப்பது உண்டு. இதற்கான காரணம் என்ன? இந்த பிரச்சனைக்கான தீர்வு காண்பது எப்படி? என்பது குறித்து இங்கு காணலாம்!

Image Source: istock

பிரச்சனைகள் ஏதும் உண்டா?

குழந்தைகள் பச்சை காய்கறிகள், கீரைகள் அல்லது பழங்கள் போன்றவற்றை உட்கொண்ட பிறகு மலம் பச்சை நிறத்தில் வெளிவரலாம். இது இயல்பான ஒரு விஷயம் தான் என்றாலும் குழந்தைகளுக்கு தொடர்ந்து பல நாட்களுக்கு பச்சை நிறத்தில் மலம் கழித்தால் மருத்துவரை சந்திப்பது அவசியம்.

Image Source: istock

பச்சை நிறத்தில் மட்டும் அல்ல!

பச்சை நிறம் மட்டும் அல்லாது மஞ்சள், பழுப்பு நிறங்களிலும் குழந்தைகள் மலம் கழிக்கலாம். இதுவும் இயல்பான ஒன்று, அதேநேரம் உங்கள் குழந்தை கருப்பு அல்லது வெள்ளை நிறத்தில் மலம் கழித்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது நல்லது!

Image Source: istock

பச்சை நிறத்தில் மலம் இருப்பதற்கான காரணம்?

இரும்பு சத்து நிறைந்த மாத்திரைகள் அல்லது மருந்துகள் காரணமாக குழந்தைகளுக்கு பச்சை நிறத்தில் மலம் இருக்கலாம். தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு மலம் பச்சை நிறத்தில் மலம் வெளிவருவது இயல்பானது.

Image Source: istock

பாக்டீரியா தொற்று!

சில குழந்தைகளுக்கு பாக்டீரியா தொற்றின் காரணமாகவும் பச்சை நிறத்தில் மலம் வெளிவருகிறது. தொடர்ந்து வயிற்றுப்போக்கு அல்லது பச்சை நிறத்தில் மலம் இருந்தால் மருத்துவ ஆலோசனையுடன் நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.

Image Source: istock

நீர்ச்சத்து குறைபாடு

நீர்ச்சத்து குறைபாடு காரணமாகவும் குழந்தைகளுக்கு பச்சை நிறத்தில் மலம் வெளியேறலாம். எனவே நீர்ச்சத்து நிறைந்த உணவுகள், காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை குழந்தைகளின் தினசரி உணவில் சேர்த்து வர இது போன்ற பிரச்சனைகள் சரியாகும்.

Image Source: pexels-com

அறிகுறிகள்

குழந்தைகளுக்கு வயிற்று வலி, வீக்கம், வயிற்றுப்போக்கு, துர்நாற்றம் வீசும் மலம், மலத்துடன் சளி, வாந்தி குமட்டல், பசியின்மை, எடை இழப்பு போன்ற பிரச்சனைகள் இருந்தால் இவை இரப்பை குடல் அழற்சிக்கான அறிகுறிகளாக இருக்கலாம். எனவே இந்த அறிகுறிகளுடன் பச்சை நிற மலம் இருந்தால் மருத்துவ உதவி தேவை.

Image Source: istock

எத்தனை நாள் இது நீடிக்கும்?

பச்சை நிற மலம் ஏற்படுவதற்கான காரணங்களின் அடிப்படையில் இரண்டு நாட்கள் முதல் வாரங்கள் வரை நீடிக்கலாம். உணவு காரணமாக பச்சை நிற மலம் இருந்தால் அது உடனடியாக குணமடையும். ஆனால் நோய் தொற்று காரணமாக பச்சை நிறம் மலம் ஏற்பட்டால் சிகிச்சைக்குப் பிறகு இதனை சரி செய்ய முடியும்.

Image Source: istock

அவசர சிகிச்சை

பச்சை நிற மலத்துடன் குழந்தைகளுக்கு கடுமையான வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிப்பதில் சிரமம், காய்ச்சல், மயக்கம், மலத்துடன் ரத்தப்போக்கு, சுவாசிப்பதில் சிரமம் போன்ற அறிகுறிகள் இருந்தால் இவை குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவை என்பதை பெற்றோர்களுக்கு குறிப்பிடுகிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: குழந்தைகளுக்கு அடிக்கடி உண்டாகும் குமட்டலும் - அதன் தீர்வுகளும்!

[ad_2]