May 16, 2024
BY: Anojஊட்டச்சத்துக்கள் நிறைந்த பாசிப்பயிறு, குழந்தை வளர்ச்சியில் முக்கிய பங்கை கொண்டுள்ளது. அதை கொண்டு குழந்தைக்கு ஆரோக்கியமான சாதம் எப்படி செய்வது என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
பாசிப்பயிறு- கால் கப்; அரிசி - கால் கப்; நெய் - 2 டீஸ்பூன்; கடுகு - 1 டீஸ்பூன்; சீரகம் - 1 டீஸ்பூன்; பூண்டு - 4 பற்கள்; நறுக்கிய வெங்காயம் - 1; நறுக்கிய தக்காளி - 1; நறுக்கிய கேரட் - 1 கப்; மஞ்சள் - 1 சிட்டிகை; உப்பு - தேவைக்கேற்ப
Image Source: istock
முதலில் கடாயில் வெறுமனே பாசிப்பயிறை சேர்த்து வறுக்க வேண்டும்
Image Source: istock
இப்போது ஒரு பாத்திரத்தில் அரிசி மற்றும் வறுத்த பாசிப்பயிறை ஒன்றாக சேர்க்க வேண்டும். அத்துடன் தண்ணீரை சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து, சுமார் 10 நிமிடங்கள் ஊறவிட வேண்டும்
Image Source: istock
இப்போது கடாயில் நெய் ஊற்றி உருகியதும் கொஞ்சம் கடுகை சேர்த்து தாளிக்க வேண்டும்
Image Source: istock
அடுத்து, சீரக விதை மற்றும் நறுக்கிய பூண்டை சேர்த்து நன்றாக கிளறிவிடவும்
Image Source: istock
பிறகு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். அடுத்து, தக்காளியை சேர்த்து மென்மையாக வதக்கிவிட்டு, நறுக்கிய கேரட்டை சேர்க்க வேண்டும்
Image Source: pexels-com
இப்போது மஞ்சள் மற்றும் தேவையான அளவு உப்பை சேர்த்துவிட்டு ஊறவைத்த பாசிப்பயிறு அரிசி கலவையை சேர்த்து கிளறவும்.
Image Source: istock
இறுதியாக, தேவையான அளவு நீரை ஊற்றி, கடாயை மூடி வேகவைத்தால் டேஸ்டியான சாதம் ரெடி. அதை நன்றாக மசித்து குழந்தைக்கு மதிய உணவாக கொடுத்தால் அடம்பிடிக்காமல் சாப்பிடுவார்கள்
Image Source: istock
Thanks For Reading!