May 29, 2024
By: mukesh Mஒரு சில குழந்தைகளுக்கு இரவு நேரங்களில் மட்டும் காய்ச்சல் வந்து செல்ல கூடும். இவ்வாறு இரவு நேரங்களில் குழந்தைகளுக்கு காய்ச்சல் உண்டாவது ஏன்? அதை சரி செய்வது எப்படி? என்பது குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
குழந்தைகளுக்கு காலையில் காய்ச்சல் குறைந்து மாலையில் காய்ச்சல் அதிகரித்தால் அதன் அறிகுறிகளை பெற்றோர்கள் நன்றாக கவனிக்க வேண்டும். காய்ச்சல் குழந்தைகளுக்கு பொதுவானது என்றாலும், தொடர்ந்து காய்ச்சல் இருந்தால் மருத்துவ உதவியை நாட வேண்டும்.
Image Source: istock
இரவு நேரங்களில் உங்கள் குழந்தைக்கு உடல் வெப்பநிலை அதிகமாகிறது என்றால், குறிப்பிட்ட இடைவேளையில் குழந்தையின் உடல் வெப்ப நிலையை சோதிக்க வேண்டும். மருத்துவரின் ஆலோசனைப்படி சரியான இடைவெளியில் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.
Image Source: istock
உங்கள் குழந்தைக்கு மூச்சு திணறல், சுவாசிப்பதில் சிரமம், அடிக்கடி வாந்தி எடுத்தல், பேதி போன்ற பிரச்சனைகள் காய்ச்சலுடன் இருந்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டியது அவசியம்.
Image Source: istock
குழந்தைகளுக்கு காய்ச்சல் ஏற்படும்போது நன்றாக ஓய்வு தேவை. தூக்கமின்மை காய்ச்சலின் தீவிரத்தை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம். எனவே உங்கள் குழந்தையை அடிக்கடி தொந்தரவு செய்யாமல் அமைதியான இடத்தில் நன்றாக தூங்க விடுங்கள்.
Image Source: pexels-com
பொதுவாக குழந்தையின் உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பதால் காய்ச்சல் ஏற்படுகிறது. குழந்தையின் உடல் வெப்பநிலையை குறைக்க நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை கொடுக்க வேண்டும். போதுமான அளவு நீர் பருக கொடுக்க வேண்டும்.
Image Source: istock
காய்ச்சல் நேரத்தில் குழந்தைகளுக்கு எளிதாக ஜீரணமாக கூடிய உணவுகளை கொடுக்க வேண்டும். சூடான சூப்புகள், ரசம் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். காய்ச்சல் சமயத்தில் தேநீர், காபி, சோடா போன்றவற்றை தவிர்க்கவும் .
Image Source: istock
காய்ச்சலுக்கு மருந்தகங்களில் கிடைக்கும் மருந்துகளை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது. குழந்தைகளுக்கு மருந்துகளை கொடுப்பதற்கு முன் நிச்சயமாக மருத்துவரின் ஆலோசனையோடு கொடுக்க வேண்டும். ஏனெனில் ஆலோசனை இன்றி கொடுக்கப்படும் மருந்துகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.
Image Source: istock
மூன்று மாதங்களுக்கும் குறைவான குழந்தைகளின் உடல் வெப்பநிலை 100 டிகிரிக்கும் அதிகமாக இருந்தால் மற்றும் மற்றவர்களில் 104 டிகிரிக்கு மேல் காய்ச்சல் தொடர்ந்து இருந்தால் மருத்துவ உதவி தேவை. 106 டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்தால் அது மூளையில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மறந்து விடாதீர்கள்.
Image Source: istock
Thanks For Reading!