Aug 1, 2024
By: Anojகுழந்தைகளுக்கு பெரும்பாலும் 1 வயது வரை தாய்ப்பால் கொடுத்திட நிபுணர்கள் பரிந்துரைக்கிறார்கள். ஆனால், சில தாய்மார்க்ள் 2 வயது வரையும் தாய்ப்பாலூட்ட செய்கிறார்கள். அதற்கு பின்னால் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை பற்றி இங்கு பார்க்கலாம்
Image Source: pexels-com
குழந்தை வளர்ச்சிக்கு புரோட்டீன், கால்சியம், வைட்டமின் போன்ற சத்துக்கள் அவசியமாகும். ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை குழந்தைகள் சாப்பிட மறுத்தாலும், தாய்ப்பாலூட்டுவது அத்தகைய சத்துக்கள் கிடைப்பதை உறுதி செய்திட முடிகிறது
Image Source: istock
தாய்ப்பாலில் தொற்று நோயை எதிர்த்து போராடக்கூடிய ஆற்றல் உள்ளது. அதனை தொடர்ந்து அளிப்பது மூலம், குழந்தையின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தி அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படுவதை தடுத்திட செய்யலாம்
Image Source: istock
தாய்ப்பால் கொடுப்பதை நீட்டிப்பது நோய் பாதிப்புகளை தடுக்க உதவுவதாக கூறப்படுகிறது. அந்த தாய்மார்களுக்கு மார்பக புற்றுநோய், நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய் அபாயம் குறைவதாக ஆய்வறிக்கை கூறுகிறது.
Image Source: istock
குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பது மூலம் மூளை வளர்ச்சி அதிகரிக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதிலுள்ள சத்துக்கள், அறிவாற்றல் திறனை மேம்படுத்தி சிறு வயதிலே புத்திசாலித்தனமானவர்களாக மாற்றக்கூடும்
Image Source: pexels-com
1 வயதுக்கு பிறகும் தாய்ப்பால் கொடுப்பது, இருவருக்கும் இடையே இணக்கத்தை அதிகரிப்பதற்கான சிறந்த வழியாகும். குழந்தைகள் ஏதேனும் விஷயத்தில் கவலையாக இருக்கையில், அவர்களை அரவணைத்து தாய்ப்பால் ஊட்டுவது பிற எண்ணங்களை மறந்து மகிழ்ச்சியாக வைத்திருக்கும்
Image Source: pexels-com
தாய்ப்பால் நுகர்வு குழந்தைகளின் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்தக்கூடும். அவர்கள் சாப்பிடும் பிற உணவுகள் எளிதாக ஜீரணமாகக்கூடும். மேலும், தாய்ப்பாலில் உள்ள சத்துக்கள் இரைப்பை குடல் பிரச்சனை ஏற்படாமலும் தடுக்கக்கூடும்
Image Source: istock
அலுவலக வேலை, வீட்டு வேலை, குடும்ப பிரச்சனை என பல விஷயங்களில் கவனத்தை செலுத்தும் தாய்மார்கள், தாய்ப்பால் கொடுக்கையில் மிகவும் ரிலாக்ஸாக உணர செய்வார்கள். தாய்ப்பாலூட்டும் போது வெளியாகும் சில ஹார்மோன்கள் மனதை அமைதிப்படுத்த செய்கிறது
Image Source: pexels-com
தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க ஓட்மீல், வெந்தயம், பூண்டு, எள் விதைகள், பார்லி, பப்பாளி, கொண்டைக்கடலை போன்ற உணவுகளை தினசரி உணவு முறையில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்
Image Source: istock
Thanks For Reading!