[ad_1] குழந்தையின் கல்வியை பாதிக்கும் பெற்றோரின் சண்டைகள்.. இந்த அறிகுறிகளை பாருங்க!

குழந்தையின் கல்வியை பாதிக்கும் பெற்றோரின் சண்டைகள்.. இந்த அறிகுறிகளை பாருங்க!

Jun 1, 2024

By: Anoj

பெற்றோர் ஈடுபாடு இருக்காது

குடும்ப பிரச்சனைகள் காரணமாக குழந்தையின் கல்வியில் பெற்றோரின் ஈடுபாடு குறைந்துவிடக்கூடும். அவர்களால் பாடங்களில் முழுமையான கவனத்தை செலுத்த முடியாது. எந்த மாதிரியான பிரச்சனைகளை குழந்தைகள் சந்திக்கலாம் என்பதை இங்கு காணலாம்

Image Source: istock

மதிப்பெண் குறைவது

உங்க குழந்தை சிறந்த விளங்கிய பாடத்தில் கூட திடீரென சரிவை சந்திப்பது, வீட்டில் மோசமான சூழ்நிலையை எதிர்கொண்டிருப்பதை குறிக்கிறது

Image Source: istock

லீவ் போடுவது

குழந்தை அடிக்கடி பள்ளிக்கு லீவ் போடுவது அல்லது தொடர்ந்து தாமதமாக வருவது போன்ற செயல்களில் ஈடுபடுவது, கல்வி செல்வதற்கான உந்துதலை குடும்ப பிரச்சனைகள் பாதிப்பதாக கருதலாம்

Image Source: pexels-com

அமைதிக்காப்பது

குழந்தை திடீரென சக மாணவர்களுடன் பேசிக்கொள்வதை நிறுத்துவது அல்லது தினசரி செய்த பிடித்தமான விஷயங்களை தவிர்ப்பது ஆகியவை, குழந்தை வீட்டில் எதிர்கொள்ளும் சவால்களின் விளைவாக இருக்கலாம்

Image Source: istock

கவனம் செலுத்துவதில் சிரமம்

குடும்பப் பிரச்சனைகள், வகுப்பறை நடவடிக்கைகளின் போது குழந்தை கவனம் செலுத்துவதிலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம். மனதில் நியாபகம் வரும் பிரச்சனைகளால், வகுப்பறையில் ஆக்டிவாக இல்லாமல் போக வாய்ப்புள்ளது

Image Source: istock

உடல் அறிகுறிகள்

குடும்ப பிரச்சனைகளால் ஏற்படும் மன உளைச்சல் குழந்தைகளுக்கு உடல் ரீதியான பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். தலைவலி, வயிற்றுவலி, சோர்வு போன்றவற்றால் குழந்தையால் பள்ளியில் திறம்பட செயல்பட முடியாமல் போகலாம்

Image Source: pexels-com

நடத்தையில் திடீர் மாற்றம்

பள்ளியில் குழந்தையின் செயல்பாடு திடீரென ஆக்ரோஷமாக மாறுவது அல்லது ஆபத்தான செயல்களில் ஈடுபடுவது ஆகியவை, குடும்ப பிரச்சனைகளால் மனதில் ஏற்பட விரக்தியின் வெளிப்பாடாக இருக்கலாம்

Image Source: pexels-com

பழக்கவழக்கங்களில் மாற்றங்கள்

குழந்தை சாப்பிடுவது அல்லது தூங்கும் முறைகளில் மாற்றம் ஏற்படுவது, குடும்பப் பிரச்சினைகளால் தூண்டப்படும் மன உளைச்சலைக் குறிக்கலாம்

Image Source: istock

மனநிலை மாற்றம்

குடும்ப பிரச்சனைகளால் குழந்தைகள் மன அழுத்தத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. இதனால், எரிச்சல், பதட்டம் அல்லது சோகம் போன்ற உணர்வுகள் மனநிலையில் ஏற்படக்கூடும். இது குழந்தையின் கல்வியை மோசமாக பாதிக்கலாம்

Image Source: istock

Thanks For Reading!

Next: 'அப்புறம் பாத்துக்கலாம்' என்று தள்ளிப்போடும் பழக்கத்தை கைவிட சில டிப்ஸ்

[ad_2]