[ad_1] குழந்தையின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைக்கும் விஷயங்கள்

குழந்தையின் நம்பிக்கையை சுக்குநூறாக உடைக்கும் விஷயங்கள்

Jun 28, 2024

By: Anoj

தேவையற்ற இடத்தில் விமர்சனம்

குழந்தைகள் தங்களுடைய முயற்சிகள் போதுமானதாக இல்லை என்று திரும்பத் திரும்ப கூறினால் அவர்கள் தங்கள் நம்பிக்கையை சந்தேகிக்கிறார்கள் என்று அர்த்தம். அவர்கள் என்ன தவறு செய்தார்கள் என்பதில் கவனம் செலுத்தாமல், ஆக்கப்பூர்வமான கருத்துகளை சொல்ல வேண்டும். அவர்களது பலத்தை எடுத்துரைக்க வேண்டும்

Image Source: istock

அதிக பாதுகாப்புடன் வளர்ப்பது

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தீங்கு விளைவிக்காமல் பாதுகாப்பது இயற்கையானது தான். ஆனால் அதிகப்படியான பாதுகாப்பு கொடுப்பது அவர்களின் நம்பிக்கையை சிதைத்து விடும். எனவே சவால்களை சமாளிக்க அவர்களுக்கு சுதந்திரம் கொடுங்கள்.

Image Source: istock

அதிகமாக எதிர்பார்ப்பது.,

எதிர்பார்ப்பு குழந்தைகளை சாதிக்க தூண்டும். ஆனால் அதிகப்படியான பெற்றோரின் எதிர்பார்ப்பு குழந்தைகளின் நம்பிக்கையை சிதைத்து விடும். பெற்றோரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய முடியாமல் குழந்தைகள் தோல்வியை தழுவலாம்.

Image Source: pexels-com

ஒப்பீடு செய்தல்

ஒரு குழந்தையை மற்ற குழந்தைகளுடன் ஒப்பீடு செய்வது அவர்கள் நம்பிக்கையை சிதைத்து விடும். இது பொறாமை உணர்வுகளை அவர்களுக்கு உண்டாக்கலாம்.

Image Source: pexels-com

பாராட்டு மிகவும் அவசியம்

ஒரு குழந்தையின் முயற்சியை நீங்கள் அங்கீகரிக்காமல் போகும் போது அவர்கள் தங்களை திறமையற்றவர்களாக நினைக்கின்றனர். இதனால் நம்பிக்கையை இழக்கின்றனர். எனவே குழந்தை எவ்வளவு சிறிய விஷயங்களை செய்தாலும் அவர்களை பாராட்ட மறக்காதீர்கள்.

Image Source: pexels-com

அதிக செல்லம் ஆபத்தானது

ஒரு குழந்தைக்கு அன்பையும் ஆதரவையும் வழங்குவது முக்கியம் என்றாலும் அதிகப்படியான செல்லம் குழந்தையின் நம்பிக்கையை சிதைத்து விடும். செல்லம் கொடுக்கும் குழந்தைகள் மற்றவர்களை சார்ந்தே இருப்பார்கள். சவால்களை சமாளிக்க போராடுவார்கள்.

Image Source: pexels-com

உணர்வுகளை புரியாமல் இருத்தல்

குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்வது மிகவும் அவசியம். குழந்தையின் உணர்வுகளை புரியாமல் இருக்கும் போது அல்லது புறக்கணிக்கப்படும் போது பாதுகாப்பற்றவர்களாக நினைக்கிறார்கள்.

Image Source: istock

தவறுகளுக்கு தண்டனை கொடுத்தல்

தவறுகள் என்பது கற்றலின் ஒரு பகுதியாகும். எனவே தவறு செய்யும் குழந்தைக்கு கடுமையான தண்டனையை கொடுப்பது அவர்களுக்கு தோல்வி பயத்தை உண்டாக்கலாம். இதனால் நம்பிக்கையை இழக்க நேரிடலாம்.

Image Source: istock

நிறைய எல்லைகளை வகுத்தல்



குழந்தைகளுக்கு எப்பொழுதும் தெளிவான எல்லைகளை அமைப்பது மிகவும் அவசியம். எல்லைகள் முறையாக இல்லாமல் இருந்தால் அவை குழப்பம் மற்றும் பாதுகாப்பின்மைக்கு வழி வகுக்கும்.

Image Source: pexels-com

Thanks For Reading!

Next: வீட்டு தோட்டத்திற்கு தேனீக்களை ஈர்க்க சில குறிப்புகள்

[ad_2]