Jun 5, 2024
By: mukesh Mகர்ப்ப காலத்தில் குழந்தை பிறக்கும் தேதியை கணக்கிடுவது குறித்து குழப்பம் இருக்கலாம். இந்த குழப்பங்களை தவிர்த்து, குழந்தை பிறக்கும் தேதியை கணக்கிடுவது எப்படி? என்பதை இங்கு நாம் பார்க்கலாம்.
Image Source: istock
குழந்தை எப்போது பிறக்கும் என்பதை அறிந்து கொள்ள இந்த Due Date Calculator உதவுகிறது. குறிப்பிட்ட தேதியில் பொதுவாக குழந்தைகள் பிறப்பது அரிது. குழந்தை பிறக்கும் தேதியை அறிந்து கொள்வது முன்கூட்டியே திட்டமிடுவதற்கு இந்த கணக்கீட்டு முறை உதவுகிறது.
Image Source: istock
ஒரு குழந்தை கருப்பையில் முழுமையாக உருவாக 38 வாரங்கள் எடுக்கின்றது. இந்த 38 வார கர்ப்ப காலத்தின் அடிப்படையில் குழந்தை பிறக்கும் தேதியை மருத்துவர்கள் முடிவு செய்கிறார்கள். 37 வாரம் முதல் 42 வாரங்களுக்குள் குழந்தை முழுமையாக வளர்ச்சி அடைந்து பிறக்க தயாராகிறது.
Image Source: istock
கர்ப்பம் தரிப்பதற்கு முன்னர் கடைசி மாதவிடாயின் அடிப்படையில் இந்த Due Date கணக்கிடப்படுகிறது. மாதவிடாய் தொடங்கிய நாளிலிருந்து 40 வாரங்களுக்குப் பிறகான தேதியை Due Date என்கிறார்கள்.
Image Source: istock
உங்களது கர்ப்பம் உறுதியான தேதியை நீங்கள் தெரிந்து வைத்திருந்தால், அந்த தேதியை வைத்து குழந்தை பிறக்கும் தேதியை கண்டறிய முடியும். கர்ப்பம் தரித்த தேதியிலிருந்து 38 வாரங்களுக்கு பிறகான தேதி உங்களது Due Date.
Image Source: istock
நீங்கள் IVF முறையில் கருத்தரித்து இருந்தால் உங்கள் Due Date-னை கணக்கிட IVF முறையில் கருத்தரித்த தேதியை கணக்கிடலாம். IVF முறையில் துல்லியமாக அறிந்து கொள்ள மருத்துவ உதவி பெறலாம்!
Image Source: istock
கடைசி மாதவிடாய் தேதியை நீங்கள் சரியாக அறியவில்லை என்றால் உங்களது மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை கேட்கலாம். சோதனையின் அடிப்படையில் எத்தனை மாதம் கருத்தரித்துள்ளீர்கள் என்பதை அவர்கள் உங்களுக்கு கூறுவார்கள்.
Image Source: pexels-com
கருவின் டியூ டேட்டை மாற்றுவது அவசியம் என்றால் மட்டுமே மருத்துவர்கள் அதை செய்கிறார்கள். குறை பிரசவம், சுகப்பிரசவம், சிசேரியன் என பிரசவத்திற்கு தகுந்தவாறு இந்த தேதிகள் மாறுபடுகின்றன.
Image Source: istock
டியூ டேட் கால்குலேட்டர் உங்கள் பிரசவத்திற்கான தேதியை கணக்கிடுவதற்கான ஒரு அறிவியல் கருவி மட்டுமே. மகப்பேறு மருத்துவர் குழந்தையின் கருவை பரிசோதித்து குழந்தை பிறக்கும் தேதியை சரியாக கணக்கிடுவார். துல்லியமான தகவலை பெற நீங்கள் மகப்பேறு மருத்துவர் அணுகுவது அவசியம்.
Image Source: istock
Thanks For Reading!