Apr 30, 2024
BY: Anojசமையல் செய்கையில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு மிளகாய் அதிகமாக சேர்த்தால் கூட, உணவை சாப்பிடுவது கடினமாகிவிடும். இந்தப் பதிவில், குழம்பில் காரம் அதிகமாகி விட்டால் அதனை எளிதாக சரிசெய்யும் வழிகளை பற்றி காணலாம்
Image Source: istock
குழம்பின் அளவை அதிகரிப்பது கூட காரத்தை குறைக்கும் எளிய வழியாகும். சிறிதளவு தண்ணீர் சேர்க்கும் போது, காரத்தின் அளவு வெகுவாக குறையக்கூடும்
Image Source: istock
குழம்பு காரமாக இருந்தால், அதில் சிறிளவு கிரீம் அல்லது தேங்காய் பாலை சேர்த்து கிளறுவது நல்ல பலனை தரக்கூடும்
Image Source: istock
குழம்பில் காரத்தின் அளவை குறைத்திட தயிர் போன்ற பால் பொருட்கள் உதவியாக இருக்கும். தயிரை நன்றாக அடித்து, குழம்பில் சேர்த்தால் காரம் குறையக்கூடும்
Image Source: pexels-com
சர்க்கரை, தேன் அல்லது ஆப்பிள் போன்ற இயற்கை சர்க்கரை பழங்களை சேர்த்து, காரத்தை குறைக்க உதவக்கூடும். மிதமான அளவில் சேர்ப்பதால் இனிப்பு சுவை அதிகரிக்காமலே காரத்தை குறைத்துவிட முடியும்
Image Source: istock
எலுமிச்சை ஜூஸ், வினிகர் போன்ற அமிலத்தன்மை பானங்களை சேர்ப்பது, காரத்தை குறைப்பதோடு உணவின் சுவையும் அதிகரிக்கக்கூடும். சிட்ரஸ் ஜூஸின் சில சொட்டுகள் சேர்ப்பது கார அளவை சமநிலைக்கு கொண்டு வரக்கூடும்
Image Source: istock
வேகவைத்த உருளைக்கிழங்கு, அரிசி அல்லது பிரட் சேர்ப்பது, குழம்பில் உள்ள காரத்தை கணிசமான அளவில் குறைக்கும் என கூறப்படுகிறது
Image Source: istock
குழம்பில் காய்கறிகள் சேர்ப்பது மூலம் அதன் அளவை அதிகரித்து காரத்தை குறைக்க செய்யலாம். குடை மிளகாய், கேரட் அல்லது பட்டாணி போன்றவற்றை சேர்ப்பது காரத்தை குறைப்பதோடு சுவையை அதிகரிக்கும்
Image Source: istock
முந்திரியுடன் சிறிது தண்ணீர் சேர்த்து பேஸ்டாக அரைத்துக்கொள்ளவும். அதை காரம் அதிகமான குழம்பில் சேர்த்தால், காரம் குறைவதோடு குழம்பின் சுவையும் சூப்பராக மாறக்கூடும்
Image Source: istock
Thanks For Reading!