[ad_1] கூடுதல் கலோரிகளை குறைக்க உதவும் 'சீரற்ற நடைப்பயிற்சி'!

Jul 10, 2024

கூடுதல் கலோரிகளை குறைக்க உதவும் 'சீரற்ற நடைப்பயிற்சி'!

mukesh M

சீரற்ற நடைப்பயிற்சி என்றால் என்ன?

சீரற்ற நடைப்பயிற்சி எனப்படுவது வழக்கமான பாத அடிகளுக்கு இணையில்லா வகையில் சற்று கூடுதலாகவோ (அ) குறைவாகவோ அடிவைக்கும் ஒரு நடைப்பயிற்சி ஆகும்.

Image Source: istock

கலோரிகளை எரிக்குமா?

அமெரிக்க ஆய்வாளர்கள் கூற்றுப்படி இந்த சீரற்ற நடைப்பயிற்சி ஆனது வழக்கமான நடைப்பயிற்சியை காட்டிலும் கலோரிகளை 2.7% வரை அதிகம் எரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது!

Image Source: istock

சீரற்ற நடைப்பயிற்சி - முயற்சிப்பது எப்படி?

இந்த சீரற்ற நடைப்பயிற்சியை முயற்சிக்க விரும்பும் நபர்கள் தங்களின் வழக்கான காலடி அளவை காட்டிலும் 5 - 10% கூடுதலாகவோ (அ) குறைவாகவோ அடியை வைத்து; நடைப்பயிற்சி செய்து வரலாம்.

Image Source: pexels-com

நன்மைகள் என்னென்ன?

வழக்கமான நடையில் நாம் காட்டும் இந்த குறிப்பிடத்தக்க மாறுபாடு ஆனது, சீரான வளர்சிதை மாற்றத்தை உறுதி செய்து ஆரோக்கிய உடல் எடை பராமரிப்பில் உதவுகிறது.

Image Source: istock

சீரான இரத்த ஓட்டம்!

இந்த சீரற்ற நடைப்பயிற்சி ஆனது அடிப்படையில் உடலில் உள்ள கூடுதல் கொலஸ்ட்ரால்களை எரிக்கும் நிலையில், இரத்த நாளங்களில் தேங்கும் கொலஸ்ட்ரால்களை கரைத்து சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்கிறது!

Image Source: istock

இதய ஆரோக்கியம் காக்கும்!

உடல் உள் உறுப்புகளில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்யும் இந்த சீரற்ற நடைப்பயிற்சி ஆனது, இதயத்திற்கும் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து மாரடைப்பு - இதய செயலிழப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாவதையும் தடுக்கிறது!

Image Source: istock

சுவாச பிரச்சனைகள் குறையும்!

சீரற்ற நடைப்பயிற்சி செய்யும் போது சுவாச மண்டலம் வலுபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் இந்த நடைப்பயிற்சி ஆனது, சுவாச மண்டலம் தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்கிறது.

Image Source: istock

செரிமான செயல்பாடு மேம்படும்!

தினமும் காலையில் இந்த சீரற்ற நடைப்பயிற்சியை பயிற்சிப்பது, குடல் இயக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. அந்த வகையில் இது, மலச்சிக்கல் - அஜீரணம் உள்ளிட்ட பிரச்சனைகளை போக்கி, சீரான செரிமானத்தை உறுதி செய்கிறது!

Image Source: istock

எச்சரிக்கை!

மூட்டு தேய்மானம் - அழற்சி போன்ற மூட்டு தொடர்பான பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் உடல் சமநிலையின்மை பிரச்சனை கொண்டுள்ளவர்கள் இந்த சீரற்ற நடைப்பயிற்சியை தவிர்ப்பது நல்லது!

Image Source: istock

Thanks For Reading!

Next: சிறுநீரக கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு புற்றுநோய் வருமா?

[ad_2]