Jun 15, 2024
இந்தியாவில் பாரம்பரியமாக இந்த சீகைக்காயை கூந்தலுக்கு பயன்படுத்தி வருகின்றனர். பல நூற்றாண்டுகளாக சீகைக்காய் கூந்தல் பராமரிப்பில் மிகச் சிறந்த பங்கை வகிக்கிறது. இது கூந்தலுக்கு போதுமான போஷாக்கை அளிக்கிறது.
Image Source: istock
சீகைக்காய் ஒரு சிறந்த க்ளீன்சராக செயல்படுகிறது. இது முடி மற்றும் உச்சந்தலையில் உள்ள அழுக்குகள், எண்ணெய்களை போக்க உதவுகிறது. இயற்கையான எண்ணெயை அகற்றாமல் கூந்தலுக்கு புத்துணர்ச்சியை அளிக்கிறது.
Image Source: istock
கூந்தலுக்கு கடுமையான ராசயனங்கள் மிகுந்த ஷாம்புகளை பயன்படுத்தாமல் சீகைக்காயை பயன்படுத்தலாம். இது பொடுகு மற்றும் அரிக்கும் தோலழற்சியை போக்குகிறது.
Image Source: pexels-com
சீகைக்காயில் விட்டமின்கள், ஆன்டி ஆக்ஸிடன்கள் உள்ளன. இது மயிர்க்கால்களுக்கு ஊட்டமளிக்கிறது. இதன் மூலம் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை தூண்ட முடியும். முடியின் வேர்களை பலப்படுத்துகிறது.
Image Source: istock
சீகைக்காயில் உள்ள பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் பொடுகுத் தொல்லையை போக்குகிறது. இதன் அரிப்பு, சிவத்தல் இல்லாத ஆரோக்கியமான உச்சந்தலையை பெற முடியும்.
Image Source: istock
சீகைக்காய் இயற்கையாகவே கூந்தலை மென்மையாக வைக்க உதவுகிறது. இது சிக்கலை போக்குகிறது. இதனால் எளிதாக உங்களால் நினைத்த சிகை அலங்காரங்களை செய்ய முடியும்.
Image Source: istock
சீகைக்காயில் கூந்தலை வலுவூட்டும் பண்புகள் உள்ளன. இது கூந்தல் உடைந்து போவதை தடுக்கிறது. இதனால் அடர்த்தியான கூந்தலை பெற முடியும்.
Image Source: istock
சீகைக்காய் ஒரு இயற்கையான டிடாங்க்லராக செயல்படுகிறது. இதனால் இது சிக்கலை எளிதாக போக்குகிறது. இதனால் உங்களுக்கு பிடித்த ஹேர் ஸ்டைலை எளிதாக செய்ய முடியும்.
Image Source: istock
சீகைக்காயில் எந்த வித கெமிக்கல்களும் இல்லை. இது முழுக்க இயற்கை பொருட்களால் ஆனது. கெமிக்கல்கள் நிறைந்த ஷாம்புகள் மற்றும் கண்டிஷனருக்கு பதிலாக சீகைக்காயை பயன்படுத்தலாம்.
Image Source: unsplash-com
Thanks For Reading!