May 13, 2024
திரிபலா வாதம், பித்தம் மற்றும் கபம் இவற்றை சமநிலையில் வைக்க உதவுகிறது. திரிபலா முடி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. உச்சந்தலை ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
Image Source: istock
ஆய்வின் படி முன்கூட்டியே நரைமுடி பிரச்சினையை சந்திப்பவர்களுக்கு திரிபலா பவுடர் ஹேர் வாஷாக கொடுக்கப்பட்டது. இது பித்த தோஷத்தை குறைக்க உதவுகிறது. முன்கூட்டியே நரைமுடி வருவதை தடுக்க உதவுகிறது.
Image Source: istock
திரிபலாவில் டானின்கள் உள்ளன. இது தலைமுடியை கருமையாக வைக்க உதவுகிறது. இது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மெலனின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
Image Source: pexels-com
Alopecia Areata எனும் தன்னுடல் தாக்குநோய், கடுமையான முடி உதிர்வுக்கு வழிவகுக்கும். அதற்கு சிகிச்சையளித்து சரிசெய்திட திரிபுலா உதவி புரிகிறது.
Image Source: istock
திரிபலாவில் ஃப்ளவனாய்டுகள், ஆல்கலாய்டுகள், டானின்கள், சபோனின் கிளைக்கோசைடுகள், பினாலிக் கலவைகள் உள்ளன. இது ப்ரீ ரேடிக்கலில் இருந்து கூந்தலை பாதுகாக்கிறது.
Image Source: istock
உச்சந்தலையில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க திரிபலா உதவுகிறது. திரிபலா மூலம் உச்சந்தலை வீக்கத்தைக் குறைக்க முடியும்.
Image Source: istock
திரிபலாவில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது அரிப்பு மற்றும் தலையில் உள்ள பொடுகை போக்க உதவுகிறது.
Image Source: istock
ஒரு பெளலை எடுத்து அதில் 1 டேபிள் ஸ்பூன் திரிபலா பவுடர் மற்றும் கற்றாழை ஜெல்லை சேர்த்துக் ஸ்மூத் பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். இந்த பேஸ்ட்டை கூந்தலில் அப்ளை செய்யுங்கள். 30 நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு கழுவுங்கள்.
Image Source: istock
ஒரு மஸ்லின் துணி அல்லது லேசான துணியில் திரிபலா பவுடரை போட்டு கட்டிக் கொள்ளுங்கள். பிறகு ஒரு கண்ணாடி ஜாரில் 100 மி.லி பாதாம் எண்ணெயுடன் கட்டிய துணியை போட்டு 3-4 வாரம் ஊற வைத்து கூந்தலுக்கு பயன்படுத்துங்கள்.
Image Source: istock
Thanks For Reading!