Jun 10, 2024
மருதாணி கூந்தல் பராமரிப்பில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது கூந்தலுக்கு ஒரு இயற்கையான ஹேர் டையாக பயன்படுகிறது. ஆனால் இந்த மருதாணியை அதிகமாக கூந்தலுக்கு பயன்படுத்துவதால் சில பக்க விளைவுகளும் ஏற்பட வாய்ப்புள்ளது
Image Source: istock
மருதாணி கூந்தலை எளிதாக வறண்டு போகச் செய்து விடும். இது முடியில் உள்ள இயற்கையான எண்ணெய்களை நீக்க செய்கிறது. அடிக்கடி பயன்படுத்தி வந்தால் கூந்தல் வறண்டு போக நேரிடலாம்
Image Source: istock
கடைகளில் கிடைக்கும் மருதாணியில் பூச்சுத் தன்மை மற்றும் கெமிக்கல்கள் உள்ளன. அதிலுள்ள பூச்சுத் தன்மை காரணமாக கூந்தல் கரடுமுரடானதாக மாறக்கூடும்
Image Source: istock
மருதாணி கூந்தலுக்கு ஒரு வலுவான நிறத்தை அளிக்கிறது. இதை அதிகமாக பயன்படுத்துவதால் உங்கள் முடியின் இயற்கையான நிறம் மாறலாம். ஆரஞ்சு அல்லது சிவப்பு நிறத்துடன் இருக்கும்.
Image Source: pexels-com
மருதாணியை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் முடியின் இழைகள் வலுவடைந்து உடையக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் முடியின் இழைகள் பலவீனமானதாக தோன்றும்.
Image Source: istock
மருதாணி சிலருக்கு அழற்சியை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. இதனால் உச்சந்தலை எரிச்சல், அரிப்பு அல்லது அரிக்கும் தோலழற்சியை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
Image Source: istock
மருதாணியை பயன்படுத்துவது கடினமான காரியம். காரணம் இதை கூந்தலுக்கு பயன்படுத்தும் போது சருமத்தில் அல்லது ஆடையில் கறையை உண்டாக்கலாம். இதை பயன்படுத்தும் போது பார்த்து பயன்படுத்த வேண்டியிருக்கும்.
Image Source: istock
மருதாணி கூந்தலுக்கு சீரான தோற்றத்தை தருவதில்லை. இது கூந்தலில் நிறைய மாற்றங்களை உண்டாக்கலாம்.
Image Source: istock
மருதாணி, கூந்தலின் வேர் பகுதியில் படிந்துக்கொள்ள வாய்ப்புள்ளது. இது முடியின் தன்மையை பாதித்து பொலிவிழந்து போகச் செய்து விடும்
Image Source: istock
Thanks For Reading!