Jun 5, 2024
வேப்பிலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இவை பொடுகை போக்க பயன்படுகிறது. இவை உச்சந்தலை ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவுகிறது.
Image Source: istock
உங்கள் கூந்தல் மற்றும் உச்சந்தலையை மசாஜ் செய்ய வேப்ப எண்ணெய் உதவுகிறது. வேப்ப எண்ணெயை கேரியர் எண்ணெயுடன் கலந்து கூந்தலில் தேய்த்து வரலாம். இது முடி நரைப்பதை தடுக்கிறது.
Image Source: istock
வேப்பிலை நீரில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள், பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பொடுகை கட்டுப்படுத்த உதவுகிறது. வேப்பம்பூ கூந்தலுக்கு பொலிவை சேர்க்கிறது.
Image Source: istock
ஒரு கைப்பிடியளவு வேப்பிலையை எடுத்து சிறிது தண்ணீர் விட்டு மென்மையான பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து தலைமுடியில் தடவி 30 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள்.
Image Source: istock
30-40 வேப்பம்பூக்களை கொதிக்கும் நீரில் போட வேண்டும். நன்றாக கொதித்து அதன் சாறு இறங்கிய பின்பு 30 நிமிடங்கள் கழித்து தலையில் தடவி பிறகு கூந்தலை அலசுங்கள்.
Image Source: istock
வேப்பிலைகள் உச்சந்தலையை சீராக்க உதவுகிறது. இது பொடுகுத் தொல்லையை போக்க உதவுகிறது. முடி அடர்த்தியாக வளர உதவுகிறது.
Image Source: istock
வேப்பம்பூ மற்றும் வேப்பங் கொட்டை இரண்டுமே முடி வளர்ச்சியை தூண்ட உதவுகிறது. வேப்ப எண்ணெயை தேய்த்து வந்தால் மயிர்க்கால்களுக்குள் ஊடுருவி கூந்தல் அடர்த்தியாக வளர உதவுகிறது.
Image Source: pexels-com
வேப்ப எண்ணெய் பொடுகு மற்றும் பேன்களை போக்க உதவுகிறது. வேப்ப எண்ணெயை உச்சந்தலையில் தடவி வந்தால் முடி முன்கூட்டியே நரைப்பதை தடுக்கிறது.
Image Source: istock
வேப்ப எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது மயிர்க்கால்களை ஈரமாக வைப்பதோடு முடி உதிர்தல் பிரச்சினையை போக்க உதவுகிறது.
Image Source: istock
Thanks For Reading!