Jun 11, 2024
திராட்சை விதை எண்ணெய் ஒரு இயற்கையான கண்டிஷனராக செயல்படுகிறது. இந்த எண்ணெய் லேசாக இருப்பதால் எளிதாக உச்சந்தலையில் ஊடுருவி விடும். இதில் விட்டமின் சி, டி மற்றும் ஈ போன்ற சத்துக்கள் உள்ளன.
Image Source: istock
திராட்சை விதை எண்ணெய் பொடுகுத் தொல்லையை போக்குகிறது. இதிலுள்ள விட்டமின் ஈ கூந்தலுக்கு உள்ளிருந்து ஈரப்பதத்தை வழங்குகிறது. உச்சந்தலையில் ஈரப்பதம் குறைவதை தடுக்கிறது.
Image Source: istock
திராட்சை விதை எண்ணெயில் லினோலிக் அமிலம் உள்ளது. இது பாதுகாப்பு அடுக்காக செயல்பட்டு முடி சேதமடைவதை தடுக்கிறது.
Image Source: istock
திராட்சை விதை எண்ணெய் தலைமுடிக்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும். திராட்சை விதை லேசான அடர்த்தி கொண்டு இருப்பதால் க்ரீஸ் அல்லது பிசுபிசுப்பு தன்மையையும் கொடுக்காது.
Image Source: istock
திராட்சை விதை எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது க்யூட்டிகள் இடைவெளியை நிரப்பி முடியின் போரோசிட்டியை குறைக்கிறது. கூந்தலை மென்மையாக வைக்க உதவுகிறது.
Image Source: pexels-com
திராட்சை விதை எண்ணெயில் ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஃப்ளவனாய்டுகள் உள்ளன. திராட்சை விதை எண்ணெயை சூடாக காய்ச்சி மசாஜ் செய்து வந்தால் இரத்த ஓட்டத்தை அதிகரித்து வலுவான முடி வளர்ச்சியை பெற முடியும்.
Image Source: istock
திராட்சை விதை எண்ணெய் புதிய மற்றும் ஆரோக்கியமான முடி செல்கள் மீளுருவாக்கம் செய்ய உதவுகிறது. இவை உச்சந்தலை மற்றும் செல்லுலார் சேதத்தை எதிர்த்து போராட உதவுகிறது. இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் முன்கூட்டியே முடி நரைப்பதை தடுக்கிறது.
Image Source: istock
திராட்சை விதை எண்ணெயில் DHT ஹார்மோன் தடுப்பான்கள் உள்ளன. இது முடி உதிர்தலை கட்டுப்படுத்த உதவுகிறது. மயிர்க்கால்களை பலப்படுத்துகிறது.
Image Source: istock
திராட்சை விதை எண்ணெயில் பீனாலிக் அமிலம் உள்ளது. இது கூந்தலை புற ஊதாக் கதிர்வீச்சில் இருந்து காக்கிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது.
Image Source: istock
Thanks For Reading!