Jun 25, 2024
வெங்காயத் தோலில் ஆன்டி ஆக்ஸிடன்கள், வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது. அவற்றை தூக்கி எறிவதற்கு பதிலாக, முடி ஆரோக்கியத்திற்கு எப்படி பயன்படுத்தலாம் என்பதை இங்கு பார்க்கலாம்
Image Source: istock
2 டீஸ்பூன் ஆளி விதைகள், 1 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், வெங்காயத் தோல் (2-3 வெங்காயம்)
Image Source: istock
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அதில் வெங்காயத் தோல் மற்றும் ஆளி விதைகளை போட்டு 5-7 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும். கலவையை வடிகட்டி அதனுடன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்றாக கலக்குங்கள்
Image Source: istock
இந்த ஹேர் மாஸ்கை உச்சந்தலையில் தடவி சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் காத்திருக்க வேண்டும். பிறகு, குளிர்ந்த நீரில் வாஷ் செய்யலாம்
Image Source: istock
வெங்காயத் தோலில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்கள் உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
Image Source: istock
வெங்காயத் தோலில் விட்டமின் ஏ, விட்டமின் சி, விட்டமின் ஈ மற்றும் கந்தகம் நிறைந்து காணப்படுகிறது. இது மயிர்க்கால்களை வலுவாக்குகிறது. கூந்தல் உடைவதை குறைக்கிறது. அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
Image Source: istock
வெங்காயத் தோலை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உச்சந்தலை pH அளவை சமநிலையில் வைக்க முடியும். பொடுகை குறைக்க உதவுகிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
Image Source: istock
வெங்காயத் தோலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் கூந்தலுக்கு இயற்கையான பளபளப்பை கொடுக்கும். இது கூந்தலை பொலிவாக வைக்க உதவுகிறது.
Image Source: pexels-com
வெங்காயத் தோல் இயற்கையான ஒன்று. இது தீங்கு விளைவிக்கும் இராசயனங்களிலிருந்து உங்கள் கூந்தலை காக்கிறது. செலவு குறைந்த ஒன்றாகும்.
Image Source: istock
Thanks For Reading!