[ad_1] கூந்தல் அடர்த்தியாக வளர உதவும் முட்டை ஷாம்பு - எப்படி பயன்படுத்துவது?

Aug 8, 2024

கூந்தல் அடர்த்தியாக வளர உதவும் முட்டை ஷாம்பு - எப்படி பயன்படுத்துவது?

Suganthi

முட்டை ஷாம்பு

முட்டையில் கூந்தலுக்கு தேவையான அனைத்து போஷாக்குகளும் அடங்கியுள்ளன. கூந்தலுக்கு தேவையான புரோட்டீன், கரோட்டீன்கள் மற்றும் விட்டமின்கள் உள்ளன. இவை மயிர்க்கால்களுக்கு போஷாக்கு அளிக்கிறது.

Image Source: pexels-com

ஊட்டச்சத்து நிறைந்தது

2016-ல் வெளியான ஆய்வின்படி, முடியின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் அமினோ அமிலங்கள் முட்டையில் உள்ளன. அவை புரதங்கள், வைட்டமின்கள் ஏ, பி மற்றும் சி ஆகியவை உள்ளன.

Image Source: istock

முடி உடைவதை குறைக்கிறது

100 கிராம் முட்டையில் 12.6 கிராம் புரதம் உள்ளது என்று அமெரிக்க வேளாண்மை துறை தெரிவித்துள்ளது. முட்டையில் உள்ள புரதம் கரோட்டீன் உற்பத்திக்கு உதவுகிறது. இதனால் முடியிழைகள் வலிமையடைகிறது.

Image Source: istock

முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது

முட்டையில் பயோட்டின், வைட்டமின் பி போன்ற சத்துக்கள் உள்ளன. இது முடி வளர்ச்சிக்கு உதவுகிறது. இது ஒட்டுமொத்த உச்சந்தலை ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. பயோட்டின் அதிகளவு உள்ளது.

Image Source: istock

பொடுகு தொல்லையை போக்குகிறது

முட்டையில் உள்ள கொழுப்பு அமிலங்கள் முடி ஆரோக்கியத்திற்கு உதவுகிறது. உச்சந்தலையில் ஈரப்பதத்தை தக்க வைக்க உதவுகிறது. வறட்சி மற்றும் பொடுகுத் தொல்லையை போக்குகிறது.

Image Source: istock

தேவையான பொருட்கள்

1 முழு முட்டை, 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில், 1 டேபிள் ஸ்பூன் தேன், சில துளிகள் எஸன்ஷியல் ஆயில் எடுத்துக் கொள்ளுங்கள்.

Image Source: istock

தயாரிக்கும் முறை

முட்டையை உடைத்து நன்றாக கலந்து அதனுடன் சில துளிகள் தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் சேர்த்து அடித்துக் கொள்ளுங்கள். சிறுதளவு தேன், சில துளிகள் எஸன்ஷியல் ஆயில் சேருங்கள்.

Image Source: istock

பயன்படுத்தும் முறை

இப்பொழுது இந்த பேக்கை தலையில் அப்ளை செய்து 5-10 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கூந்தலை அலசுங்கள். இந்த இயற்கையான முட்டை ஷாம்பு கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது.

Image Source: istock

பயன்படுத்தும் காலம்

முட்டை ஷாம்புவை வாரத்திற்கு இரண்டு முறை என பயன்படுத்தி வாருங்கள். இதனால் கூந்தல் வளர்ச்சி மேம்படும். கூந்தல் வலிமையாக இருக்கும்.

Image Source: istock

Thanks For Reading!

Next: சருமத்திற்கு ‘விளக்கெண்ணெய்’ பயன்படுத்த ஏற்படும் பிரச்சனைகள்!

[ad_2]