[ad_1] கூந்தல் ஆரோக்கியமாக வளர.. 'கொலாஜன்' உற்பத்தியை எப்படி அதிகரிப்பது?

Jun 19, 2024

கூந்தல் ஆரோக்கியமாக வளர.. 'கொலாஜன்' உற்பத்தியை எப்படி அதிகரிப்பது?

Anoj

கொலாஜன் அவசியம்

கொலாஜன் என்பது உடலால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஒரு புரதமாகும். இது முடி ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன் அளவு குறைந்தால் முடி உதிர்வு, அடர்த்தி குறைவு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதனை அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்

Image Source: istock

வைட்டமின் சி

கொலாஜன் உற்பத்திக்கு வைட்டமின் சி அவசியமாகும். எனவே தினசரி உணவு முறையில் அதன் நுகர்வை அதிகரிக்க வேண்டும். வைட்டமின் சி நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்

Image Source: istock

ஜின்செங்

ஜின்செங் மூலிகையில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி உள்ளது. அதனை முடி பராமரிப்பில் சேர்ப்பது, உச்சந்தலையில் கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்க உதவக்கூடும்

Image Source: istock

கற்றாழை ஜெல்

கற்றாழை ஜெல்லில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. இது உச்சந்தலைக்கு ஊட்டச்சத்து அளிப்பதோடு ரத்த ஓட்டத்தை அதிகரித்து கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கக்கூடும்

Image Source: istock

பெர்ரி சாப்பிடுவது

தினசரி உணவில் ஸ்ட்ராபெர்ரி, பிளாக்பெர்ரி, மல்பெரி போன்றவற்றை சேர்க்க செய்யலாம். அவை ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் வைட்டமின் சி-யின் சிறந்த ஆதாரமாகும். இவை உச்சந்தலையில் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவக்கூடும்

Image Source: pexels-com

மசாஜ் செய்வது

தினமும் உச்சந்தலையை 3 முதல் 4 நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். இது உச்சந்தலையில் ரத்த ஓட்டத்தை அதிகரித்து, கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க வழிவகுக்கும்

Image Source: istock

ஹைலூரோனிக் அமிலம்

ஹைலூரோனிக் அமிலம், உச்சந்தலையில் கொலாஜன் உற்பத்தியை தூண்டக்கூடும். தினசரி முடி பாரமரிப்பில் ஹைலூரோனிக் அமிலம் கொண்டுள்ள ஹேர் சீரம்மை பயன்படுத்த செய்யலாம்

Image Source: istock

உணவு முறையில் மாற்றம்

எலும்பு சூப், கோழி இறைச்சி, மீன்கள், முட்டை மற்றும் பூண்டு ஆகியவற்றை தினசரி உணவு முறையில் சேர்க்க வேண்டும். இவை கொலாஜன் அளவை மேம்படுத்த செய்யலாம்

Image Source: istock

கொலாஜன் முடி நன்மைகள்

ரத்த ஓட்டம் அதிகரிக்க, ஃப்ரீ ரேடிக்கல் சேதங்களை தடுத்திட, மயிர்கால்களை வலுப்படுத்த, முன்கூட்டியே முடி நரைப்பதை தடுத்திட மற்றும் முடி உதிர்வை தடுத்திட கொலாஜன் உதவி புரிவதாக ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது

Image Source: istock

Thanks For Reading!

Next: கூந்தல் நீளமாக வளர கேரள பெண்கள் பயன்படுத்தும் 'நீலிபிருங்காதி எண்ணெய்' - ட்ரை பண்ணுங்க!

[ad_2]