Aug 1, 2024
கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் பராமரிப்பு தொடர்பாக மக்கள் மத்தியில் பரவும் வதந்திகள் மற்றும் அது தொடர்பான உண்மைகள் குறித்து இங்கு நாம் காணலாம்!
Image Source: istock
முடியை ஒட்ட வெட்டினால் கூந்தல் உதிர்வு குறையும் என பலரும் நம்புகின்றனர். நிபுணர்கள் கூற்றுப்படி, முடியை வெட்ட வெட்டுவது, பெரிய மாற்றங்களை உண்டாக்காது - கூந்தல் சேதத்தால் உண்டாகும் முறிவுகள் மட்டுமே குறையும்!
Image Source: istock
கூந்தலுக்கு அடிக்கடி எண்ணெய் வைப்பது கூந்தல் உதிர்வை ஏற்படுத்தும் என மக்கள் பலரும் நம்பும் நிலையில், இது உண்மை தான் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
Image Source: istock
ஆம், கூந்தல் உதிர்வு இயல்பான ஒரு செயல் ஆகும். புத்துயிர் பெரும் வகையில் கூந்தல் உதிர்வதும், மீண்டும் வருவதும் இயல்பான ஒரு செயல் ஆகும்.
Image Source: istock
மன அழுத்தம் காரணமாக கூந்தல் உதிர்வு அதிகரிக்கலாம் என பலரும் நம்புகின்றனர்; நிபுணர்களும் இதனை ஏற்கின்றனர். மன அழுத்தம் காரணாமக உண்டாகும் ஹார்மோன் மாற்றங்கள் கூந்தல் உதிர்வை அதிகரிக்க கூடும்!
Image Source: istock
தினமும் தலைக்கு குளிப்பது கூந்தல் உதிர்வை அதிகரிக்கும் என பலரும் நம்பும் நிலையில், இந்த கூற்று முற்றிலும் தவறானது என நிபுனர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: istock
ஈரமாக இருக்கும் கூந்தலை சீப்பு கொண்டு சீவுவது கூந்தல் உதிர்வை அதிகரிக்கும் என மக்கள் பலரும் நம்புகின்றனர். ஈர கூந்தலை சீவும் போது கூந்தல் சேதம் சேர்படலாம் (அ) அறுபடலாம், கூந்தல் உதிர்வு நிகழாது என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: istock
கூந்தல் உதிர்வுக்கு நம் வாழ்க்கை முறை மாற்றங்கள் முக்கிய காரணமாக இருக்கும் நிலையில், மது மற்றும் புகையிலையின் நுகர்வு கூந்தல் உதிர்வை அதிகரிக்க கூடும் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.
Image Source: istock
ரசாயனங்கள் நிறைந்த ஹேர் ஜெல், ஸ்ப்ரே போன்றவற்றின் பயன்பாடு ஆனது கூந்தல் உதிர்வை அதிகரிக்கும் என பலரும் நம்பும் நிலையில், இது உண்மை தான் என நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்!
Image Source: pexels-com
Thanks For Reading!