[ad_1] கூந்தல் கருகருவென வளர உதவும் 'செம்பருத்தி - வெந்தயம்' ஹேர் பேக்

May 27, 2024

கூந்தல் கருகருவென வளர உதவும் 'செம்பருத்தி - வெந்தயம்' ஹேர் பேக்

Anoj

செம்பருத்தி - வெந்தயம் ஹேர் பேக்

வெந்தயம் சக்தி வாய்ந்த முடி வளர்ச்சிக்கு உதவக் கூடிய பொருளாகும். அதே மாதிரி செம்பருத்தி கூந்தல் அடர்த்தியாக வளரவும், கரு கருவென வளரவும் உதவுகிறது. எனவே இந்த சிறந்த ஹேர் பேக்கை பயன்படுத்தி வந்தால் கூந்தல் அடர்த்தியாக கருகருவென வளரும்.

Image Source: istock

தேவையான பொருட்கள்

1 டீஸ்பூன் வெந்தயம், அரை கப் தயிர், 10 செம்பருத்தி இலைகள் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.

Image Source: istock

தயாரிக்கும் முறை

1 டேபிள் ஸ்பூன் வெந்தயத்தை இரவு முழுவதும் ஊற வைத்துக் கொள்ளுங்கள். இரவில் நன்றாக ஊற வேண்டும்.

Image Source: istock

தயிரை சேருங்கள்

பிறகு ஊற வைத்த வெந்தயத்தை நன்றாக அரைத்து அதனுடன் தயிரை சேர்த்து பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.

Image Source: istock

செம்பருத்தி இலைகளை சேருங்கள்

இப்பொழுது அந்த பேஸ்ட்டுடன் செம்பருத்தி இலைகளை சேர்த்து அரைத்து நன்றாக பேஸ்ட்டாக்கி கொள்ளுங்கள்.

Image Source: istock

அப்ளை செய்யுங்கள்

இப்பொழுது இந்த பேஸ்ட்டை கூந்தல் முழுவதும் அப்ளை செய்து அரை மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

Image Source: istock

கூந்தலை அலசுங்கள்

பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு கூந்தலை அலசுங்கள். கூந்தல் பளபளப்பாகவும் அடர்த்தியாகவும் இருக்கும்.

Image Source: pexels-com

வெந்தயத்தின் பயன்கள்

வெந்தயம் உச்சந்தலை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. இது பொடுகுத் தொல்லையை போக்க உதவுகிறது. வெந்தயத்தில் புரோட்டீன், நிக்கோட்டினிக் அமிலம் உள்ளது.

Image Source: istock

செம்பருத்தி இலையின் பயன்கள்

செம்பருத்தி இலையில் அமினோ அமிலங்கள் உள்ளன. இது உச்சந்தலை ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மேலும், கூந்தலை மென்மையாக வைக்க உதவுகிறது.

Image Source: istock

Thanks For Reading!

Next: முகத்தை பளபளவென வைக்க உதவும் 'கற்றாழை - தேன்' பேஸ் மாஸ்க்

[ad_2]