Jun 19, 2024
நீல்பிரிகாந்தி எண்ணெயில் கறிவேப்பிலை, வெந்தய விதை என ஏராளமான இயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இவை கூந்தல் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இதன் மூலம் கூந்தல் அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் வளரும்.
Image Source: istock
ஒரு கைப்பிடியளவு வேப்பிலை, 1 டேபிள் ஸ்பூன் ஊற வைத்த வெந்தய விதைகள், 2 டேபிள் ஸ்பூன் செம்பருத்தி பொடி, 10-15 சின்ன வெங்காயம், ஒரு ஸ்கூப் கற்றாழை ஜெல், 10-12 கருப்பு மிளகு, 500 மி. லி தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி நன்றாக காய்ச்ச வேண்டும். அப்புறம் அனைத்து பொருட்களையும் போட்டு 15 நிமிடங்கள் கொதிக்க வையுங்கள். நன்றாக ஆறிய பிறகு எண்ணெயை வடிகட்டி ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வையுங்கள்.
Image Source: istock
கறிவேப்பிலையில் அதிகளவு பீட்டா கரோட்டீன் மற்றும் புரதச்சத்து உள்ளது. இது முடி நரைப்பதையும் முடி உதிர்வதையும் தடுக்க உதவுகிறது.
Image Source: istock
வெந்தய விதைகள் பொடுகுக்கு சிறந்த சிகிச்சையை அளிக்கிறது. மேலும் கூந்தலுக்கு தேவையான ஈரப்பதத்தை வழங்கி குளிர்ச்சியை தருகிறது. கற்றாழை ஜெல் மயிர்க்கால்களை வலுவாக்குகிறது. இது கூந்தல் அடர்த்தியாகவும் பளபளப்பாகவும் கருகருவென வளர உதவுகிறது.
Image Source: pexels-com
இந்த நீலிபிருங்காதி எண்ணெயை தினசரி பயன்படுத்தி வந்தால் கூந்தல் அடர்த்தியாக வளரும். முடி உதிர்தல் பிரச்சினை இல்லாமல் இருக்கும். முடியும் கருகருவென வளரும்.
Image Source: istock
இந்த நீலிபிருங்காதி கேரள எண்ணெயில் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது பொடுகுத் தொல்லையை போக்குகிறது. வழுக்கை போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.
Image Source: istock
ஷாம்புக்களால் ஏற்படும் இராசயனங்களின் தீங்குகள் இதில் கிடையாது. ஷாம்புவை பயன்படுத்துவதற்கு முன்பு இதை பயன்படுத்தி வரலாம்.
Image Source: istock
இந்த நீலிபிருங்காதி எண்ணெயை தினமும் தலைக்கு குளிப்பதற்கு முன்பு போதுமான அளவு எடுத்து உச்சந்தலையில் மற்றும் முடியில் ஆழமாக அப்ளை செய்து மென்மையாக 5 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யுங்கள்.
Image Source: istock
Thanks For Reading!