Aug 9, 2024
முட்டையில் புரோட்டீன், விட்டமின் ஏ, டி மற்றும் ஈ, பயோட்டின், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. கூந்தலுக்கு பொலிவை தருகிறது. நீளமான கூந்தலை பெறலாம்.
Image Source: istock
முடியின் நீளத்திற்கு ஏற்றவாறு 1-2 முட்டைகளை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு குட்டையான கூந்தல் என்றால் ஒரு முட்டை போதுமானது. அடர்த்தியான கூந்தல் என்றால் 2 முட்டைகள் அவசியம்.
Image Source: pexels-com
எண்ணெய் பசை கூந்தல் என்றால் முட்டையின் வெள்ளைக் கருவை பயன்படுத்துங்கள். வறண்ட கூந்தல் என்றால் மஞ்சள் கருவை பயன்படுத்துங்கள். முழு முட்டையைக் கூட நீங்கள் பயன்படுத்தலாம்.
Image Source: istock
ஒரு கிண்ணத்தில் முட்டையை எடுத்து நன்றாக நுரை வரும் வரை அடிக்க வேண்டும். நுரை வரும் வரை அடித்த பிறகு கூந்தலுக்கு பயன்படுத்துங்கள்.
Image Source: istock
முட்டையை கூந்தலில் அப்ளை செய்வதற்கு முன்பு வெதுவெதுப்பான நீரில் கூந்தலை அலசுங்கள். இது மயிர்க்கால்களை திறந்து முட்டையில் உள்ள ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
Image Source: istock
ஒரு ப்ரஷ் அல்லது விரல்களைப் பயன்படுத்தி முட்டையை கூந்தலில் அப்ளை செய்யுங்கள். முட்டையை உச்சந்தலையிலும், முடியிலும் தடவுங்கள். இது வேர்களை வலிமையாக்குகிறது.
Image Source: istock
இப்பொழுது உங்கள் விரல்களைக் கொண்டு வட்ட இயக்கத்தில் மசாஜ் செய்யுங்கள். இது ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது. மயிர்க்கால்கள் ஊட்டச்சத்துக்களை உறிஞ்ச உதவுகிறது.
Image Source: istock
தலைமுடியை ஷவர் கேப் அல்லது பிளாஸ்டிக் கவரால் மூடிக் கொள்ளுங்கள். இதன் மூலம் கூந்தலில் ஈரப்பதத்தை தக்க வைக்க முடியும். 20-30 நிமிடங்களுக்கு பிறகு முட்டை வாசனை போகும் வரை கூந்தலை நன்றாக அலசிட்டு ஷாம்பு பயன்படுத்துங்கள்
Image Source: istock
இந்த முட்டை பேக்குடன் நீங்கள் தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் அல்லது ஆமணக்கு எண்ணெய்களை கூட சேர்த்துக் கொள்ளலாம். இது உள்ளிருந்து ஊட்டமளிக்கிறது.
Image Source: istock
Thanks For Reading!