May 8, 2024
வாழைப்பழத்தில் ஆன்டி மைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இது உச்சந்தலை வறண்டு போதலை சரி செய்கிறது மற்றும் கூந்தலுக்கு ஈரப்பதத்தை வழங்குகிறது. மாம்பழத்தில் உள்ள வைட்டமின் ஏ பொடுகை எதிர்த்து போராட உதவுகிறது. கூந்தலுக்கு பளபளப்பை சேர்க்கிறது.
Image Source: istock
இந்த மாஸ்க்குடன் அத்தியாவசிய எண்ணெய் சேர்க்கும் போது கூந்தலை ஈரப்பதமாக வைக்க முடியும். இது பொடுகு பிரச்சினைகளை போக்க உதவுகிறது.
Image Source: istock
பழுத்த மாம்பழம் - 1, வாழைப்பழம் - 2, டீ ட்ரி ஆயில் மற்றும் ஒரு பெளல் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்.
Image Source: istock
ஒரு பெளலை எடுத்து அதில் மாம்பழத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளுங்கள். அதில் 2 வாழைப்பழத்தையும் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளுங்கள்.
Image Source: pexels-com
இப்பொழுது இந்த கலவையுடன் டீ ட்ரி எண்ணெயை சேர்த்து கலந்து கொள்ளுங்கள். இந்த கலவையை கூந்தல் மற்றும் உச்சந்தலையில் அப்ளை செய்யுங்கள். 45-60 நிமிடங்கள் அப்படியே விடுங்கள்.
Image Source: istock
பிறகு மைல்டு ஷாம்பு கொண்டு கூந்தலை அலசுங்கள். இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு முறை என செய்து வாருங்கள்.
Image Source: istock
மாம்பழம் முடி வளர்ச்சியை அதிகரிக்கிறது. இதில் வைட்டமின் ஏ மற்றும் சி சத்துக்கள் உள்ளன. இது சேதமடைந்த கூந்தலை சரி செய்கிறது.
Image Source: istock
மாம்பழம் சிறந்த கண்டிஷனராக செயல்படுகிறது. இது தலைமுடியை பளபளப்பாகவும் கருமையாகவும் வளர உதவுகிறது. மாம்பழம், முட்டை மற்றும் தயிரை பயன்படுத்தி ஹேர் கண்டிஷனரை தயாரிக்கலாம்.
Image Source: istock
மாம்பழத்தில் விட்டமின் சி, ஏ, ஜி மற்றும் பல தாதுக்கள் உள்ளன. இது பொடுகுத் தொல்லையை போக்குகிறது. உச்சந்தலை ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
Image Source: istock
Thanks For Reading!