Jun 26, 2024
பொட்டாசியம், மெக்னீசியம் உள்ளிட்ட சத்துக்களின் சிறந்த ஆதாராகமாக வாழைப்பழம் காணப்படும் நிலையில், இந்த வாழைப்பழத்தின் தோலை கூந்தலுக்கு பயன்படுத்த கூந்தல் உதிர்வு குறையும் என நம்பப்படுகிறது!
Image Source: istock
நிபுணர்கள் கூற்றுப்படி இந்த வாழைப்பழ தோல் ஆனது கூந்தல் மற்றும் உச்சந்தலையின் பொதுவான ஆரோக்கியம் காக்க உதவுகிறது. அந்த வகையில் இது கூந்தல் வளர்ச்சியை தூண்டவும் உதவுகிறது.
Image Source: istock
கூந்தலுக்கு இந்த வாழைத்தோலை பயன்படுத்துவது, உச்சந்தலையில் சீரான இரத்த ஓட்டத்தை உறுதி செய்து தலைமுடி வேர் கால்களை வலுப்படுத்துகிறது. அந்த வகையில் கூந்தல் வளர்ச்சியை தூண்ட இது உதவுகிறது.
Image Source: istock
வாழைப்பழ தோலில் காணப்படும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், ப்ரீ ரேடிக்கல்களை எதிர்த்து போராட உதவுகிறது. மேலும் செல்களின் சேதத்தை தடுத்து, கூந்தல் ஆரோக்கியம் காக்க இது உதவுகிறது.
Image Source: istock
வாழைப்பழத் தோலில் காணப்படும் சிலிக்கா எனும் மினரல் ஒரு இயற்கை மாய்சரைசராக செயல்படுகிறது. அந்த வகையில் கூந்தல் வறட்சி உண்டாவதன் வாய்ப்பை குறைத்து, தலைமுடி ஆரோக்கியம் காக்கிறது.
Image Source: pexels-com
கூந்தல் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டங்களை அளிக்கும் இந்த வாழைப்பழ தோல் ஆனது, கூந்தல் அடர்த்தியை அதிகரிப்பதோடு கூந்தல் உதிர்விற்கான வாய்ப்பையும் குறைக்கிறது.
Image Source: istock
கூந்தல் நலம் காக்கும் இந்த வாழைப்பழ தோலினை தேன் (அ) தயிருடன் சேர்த்து ‘மாஸ்க் போல்’ உங்கள் கூந்தலுக்கு பயன்படுத்தலாம்.
Image Source: istock
நன்கு பழுத்த 2 வாழைப்பழ தோலினை மிக்ஸியில் சேர்த்து நன்கு விழுதாக அரைக்கவும். பின் இதனுடன் 3 ஸ்பூன் தேன் சேர்த்து நன்கு கரைத்துவிட ஹேர் மாஸ்க் ரெடி!
Image Source: istock
தயாராக உள்ள இந்த ஹேர் மாஸ்கினை கூந்தல், உச்சந்தலைக்கு அப்ளை செய்து 25 - 30 நிமிடங்கள் வரை உலர விடவும். பின், மிதமான ஷேம்பு பயன்படுத்து தலைக்கு குளித்துவிட நல்ல பலன் காணலாம்!
Image Source: istock
Thanks For Reading!